சிகரெட் சாம்பல் முகத்தில் பட்டதை தட்டிக்கேட்ட இளைஞர் கொலை..!

சிகரெட் சாம்பல் முகத்தில் பட்டதை தட்டிக்கேட்ட இளைஞர் கொலை..!

தஞ்சாவூர்:

புகைப்பிடிக்கும் போது சிகரெட் சாம்பல் முகத்தில் பட்டு அதை தட்டிகேட்ட இளைஞர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கொட்டையூர் பகுதியைச் சேர்ந்த பழவியாபாரி பிரகாஷ். 22 வயதான இவர் நேற்று முன் தினம் தனது நண்பர் சந்தோஷ் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் வளையப்பேட்டை வழியாக சென்ற போது, இவர்களுக்கு முன்னாள் சிகரெட்டை புகைத்தபடி ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரது சிகரெட்டின் சாம்பல் பின்னால் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த பிரகாஷ் மற்றும் அவரது நண்பர் சந்தோஷ் கண்ணில் பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ் மற்றும் சந்தோஷ் இருவரும் முன்னால் சென்று கொண்டிருந்த நபரை வழிமறித்து நிறுத்தி தட்டிக் கேட்டுள்ளனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் பிரகாஷ் மற்றும் சந்தோஷ் இருவரும் சேர்ந்து புகை பிடித்த நபரை தாக்கியுள்ளனர். அதில், அடிவாங்கிய நபர் செல்போன் மூலம் தனது நண்பர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். உடன் சம்பவ இடத்திற்கு வந்த புகைபிடித்த நபரின் கூட்டாளிகள் பிரகாஷ் மற்றும் சந்தோஷை சரமாரி தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த பிரகாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சந்தோஷ் தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில் இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய கார்த்தி, செல்வம், உள்ளிட்ட 6 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

                                                                                                                    – Gowtham Natarajan

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks