காதலி பேச மறுத்ததால் காதலன் விபரீதம்..!

சென்னை:

சென்னை, வண்ணாரப்பேட்டை சஞ்சீவிராயன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவர் கடந்த பத்து வருடங்களாக வண்ணாரப்பேட்டையில் உள்ள ஸ்டுடியோவில் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு விக்னேஷ் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டு மீண்டும் ஸ்டுடியோவிற்கு சென்றுள்ளார்.

பிறகு காலையில் ஸ்டுடியோவை திறந்துபார்த்தபோது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்ததைப் பார்த்து சக ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பிறகு இது குறித்து போலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த போலிஸார் விக்னேஷ் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் விக்னேஷ் அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த பெண் திடீரென அவரிடம் பேச மறுத்துள்ளார் இதனால் விக்னேஷ் சில நாட்களாக மன உளைச்சலில் இருந்துவந்துள்ளார். இந்நிலையில்தான் விக்னேஷ் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

                                                                                                                                                -Pradeep

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk

advertisement
© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks