கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு கடந்த செப்டம்பர் 9ம் தேதி வீட்டில் இருந்த போது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவர் உடல்நிலை குறித்து வதந்தி பரவியதை அடுத்து மருத்துவமனை நிர்வாகம் அவ்வப்போது அறிக்கை வெளியிட்டிருந்தது.

வி.எஸ்.பாபு

கடைசியாக செப்டம்பர் 22ம் தேதி மருத்துவமனை தரப்பிலிருந்து வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியானது. அதன் பிறகு மருத்துவமனை தரப்பில் எந்த அறிக்கையும் வெளியாகவில்லை. இதுதொடர்பாக வி.எஸ்.பாபு உடல்நிலை குறித்து தமிழக அரசு வெளிப்படை தன்மையுடன் நடக்க வேண்டும் என அரசியல் கட்சியினர் கோரிக்கை வைத்தனர். ஆனால் தமிழக அரசு தொடர்ந்து அமைதி காத்து வந்தது.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு

இதனிடையே கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நலம் குறித்து சட்டப்படி வெளியிடக் கோரி அத்தொகுதிக்குப்பட்ட செம்பியத்தை சேர்ந்த தேவராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதற்கு அடுத்த நாளே வி.எஸ். பாபு நேற்று பிற்பகல் 2.24 மணிக்கு மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் அறிக்கை வெளியானது. இவரது மறைவுக்கு முதல்வர் விஜய், அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் வி.எஸ்.பாபு உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

வி.எஸ்.பாபு மரணத்தில் பின்னணியில் சதி?

இந்நிலையில் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு சந்தேகம் இருப்பதாக தேவராஜன் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த ஜி.தேவராஜன் காவல் நிலையத்தில் ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார்.வி.எஸ்.பாபுவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பான அனைத்து மருத்துவ ஆவணங்களையும் பாதுகாத்து வைக்க வேண்டும்.
அவரது மரணத்தின் பின்னணியில் ஏதேனும் சதி இருக்கிறதா? என விசாரிக்க வேண்டும். என வலியுறுத்தியுள்ளார்.

Source: Read Full Article