Vijay TN Govt: தொல்லை கொடுக்க தொடங்கிய பாஜக..? தலைவலியில் ஆளும் தவெக - சமாளிப்பாரா CM விஜய்?
Vijay TN Govt: தொல்லை கொடுக்க தொடங்கிய பாஜக..? தலைவலியில் ஆளும் தவெக - சமாளிப்பாரா CM விஜய்?
News Image
Vijay TN Govt: ஆளுநரை தொடர்ந்து முதலமைச்சர் விஜயின் டெல்லி பயணம், தமிழ்நாடு அரசியலில் பல்வேறு திருப்பங்களை குறிப்பதாக அரசியல் வட்டாரங்கள் பரபரப்பாகியுள்ளன.
பரபரப்பு தனியாத தமிழ்நாடு அரசியல்:
டெல்லி சென்ற முதலமைச்சர்..!
சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றால் மத்திய பாஜக அரசின் அதிருப்தியை பெறக்கூடும் என முதலமைச்சர் தரப்புக்கு உளவுத்துறை தரப்பில் இருந்து சொல்லப்பட்டதாம். ஆனால், விழாவில் கட்டாயம் நேரில் வந்து பங்கேற்க வேண்டும் என சோனியா தரப்பிலிருந்து நேரடியாக முதலமைச்சருக்கு அழுத்தம் தரப்பட்டதாம். அதேநேரம், எப்போது வேண்டுமானாலும் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை மீண்டும் கொண்டுவரக்கூடும் என்ற சூழலும் நிலவுகிறது. அதற்கு கூட்டணி கட்சிகளின் ஆதரவு தேவை என்பதை கருத்தில் கொண்டே, முதலமைச்சர் விஜய் நேரடியாக டெல்லி சென்றாராம். அதேநேரத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, டெல்லியில் உள்ள இடதுசாரி கட்சி தலைவர்களை சந்தித்து ஆட்சிக்கான ஆதரவை தொடர்ந்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளாராம்.
இதையும் படியுங்கள்: Anbil Mahesh: இன்றோடு முடியுமா சிறைவாசம்? கிட்டாத ஜாமின் - நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் அன்பில் மகேஷ்..
வேலையை தொடங்கிய பாஜக..!
இதனிடையே, பாஜகவும் தவெக அரசுக்கு குடைச்சல் கொடுப்பதற்கான பணிகளை தொடங்கிவிட்டதாம். கடந்த வாரம் டெல்லி சென்ற ஆளுநர் அர்லேகர், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து, தமிழ்நாட்டில் நிலவும் சட்ட-ஒழுங்கு தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் விவகாரம் தொடர்பாக பாஜக நிர்வாகி அனுப்பிய கடிதம் குறித்தும் அமித் ஷா விவாதித்தாரம். அதன் பிறகே தேசிய மகளிர் ஆணையம் சார்பில் இருந்து இந்த விவகாரம் தொடர்பாக விளக்க அறிக்கை கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாம்.
முனைப்பு காட்டும் பாஜக - தலைவையில் தவெக
இதனிடையே, குதிரை பேரம் தொடர்பாக டிடிவி தினகரன் மற்றும் அதிமுக சார்பில் இருந்து அளிக்கப்பட்ட புகார்களை விசாரிக்கவும் அமித் ஷா தரப்பு அறிவுறுத்தியுள்ளதாம். அதன் பேரியிலேயே சென்னை திரும்பியதும் தலைமை செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோரை நேரில் வரவழைத்து ஆளுநர் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளாராம். இதனாலும் அரசுக்கு புதிய நெருக்கடிகள் வரக்கூடுமாம். தவெக அரசு தங்களை மீறி சென்றுவிடக்கூடாது என்ற முனைப்பில் இருப்பதாலேயே, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை தரப்பிலிருந்து மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாம். விராலிமலை இடைத்தேர்தலுக்கு முன்பாக இந்த நெருக்கடி மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாம். இதுபோக எஸ்.பி. வேலுமணி தவெக அணியில் சேருவதற்கு முட்டுக்கட்டை போடும் விதமாகவே, அதிமுக ஆட்சியில் நடைபெற்றதாக கூறப்படும் மாநகராட்சி டெண்டர் முறைகேட்டில் இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மீது வழக்கு தொடர மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாம்.
வேகமெடுக்கும் கரூர் வழக்கு..
இதுபோக தவெகவினருக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக சிபிஐ விசாரித்து வரும் கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளதாம். அதில் ஏற்கனவே விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட தவெக நிர்வாகிகள் பலர் பெயரும் சேர்க்க வாய்ப்புள்ளதாம். ஏற்கனவே திமுக மற்றும் அதிமுகவின் தீவிர அரசியலை ஒற்றை ஆளாக எதிர்கொண்டு வரும் தவெக, சகல அதிகாரங்களையும் உள்ளடக்கிய மத்தியில் ஆளும் பாஜகவின் அழுத்தங்களை எப்படி எதிர்கொள்ள போகிறது, இதனால் தமிழ்நாடு அரசியலில் ஏற்படப்போகும் அதிரடி மாற்றங்கள் என்ன? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
Source: Read Full Article
கருத்துரையிடுக
Please Select Embedded Mode To Show The Comment System.*
புதியது பழையவை
Post Ads 1
Post Ads 2
Whoever You Are, Whatever You Do, Wherever You May Be
When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola
© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks