TVK vs DMK: புத்தக ஊழலை கையில் எடுத்த தவெக... சட்டம் ஒழுங்கை கையில் எடுத்த திமுக! பரபரக்கும் அரசியல் களம்!

TVK vs DMK: புத்தக ஊழலை கையில் எடுத்த தவெக... சட்டம் ஒழுங்கை கையில் எடுத்த திமுக! பரபரக்கும் அரசியல் களம்!
News Image

தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி நடைபெற்று வருகிறது. சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளையும் வீழ்த்தி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த தவெக-விற்கு ஒவ்வொரு நாளும் முன்னாள் ஆளுங்கட்சிகள் தொடர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

தவெக - திமுக மோதல்:

தனிப்பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி நடத்தி வரும் தவெக அரசும் அதை தினசரி சமாளித்து வருகிறது. குறிப்பாக, ஆளுங்கட்சியான திமுக - எதிர்க்கட்சியான தவெக ஆகிய இரு கட்சியினர் இடையிலான மோதல் வலுப்பெற்று வருகிறது.

இந்த நிலையில், திமுக அரசு ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் விஜய் அரசு மீது சட்டம் ஒழுங்கு குற்றச்சாட்டை மிகப்பெரிய அளவில் முன்வைத்து வருகிறது. திமுக-வின் ஐடி விங் பக்கத்தில் தமிழ்நாட்டில் நடக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையையும், தினசரி நடக்கும் கொலை, கொள்ளை சம்பவங்களையும் பட்டியலிட்டு வருகின்றனர்.

ஊழலை கையில் எடுத்த தவெக:

மறுபக்கம் கடந்த கால திமுக ஆட்சியில் நடந்த ஊழல்களை ஒவ்வொன்றாக வெளியில் கொண்டு வரும் வேளையில் தவெக அரசு ஆர்வமாக உள்ளது. எவ வேலு, கே.என்.நேரு வீடுகளில் அதிரடி ரெய்டை நடத்திய தவெக அரசு முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷை ரூபாய் 400 கோடி ஊழல் வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த சூழலில், கோவை பெரியார் அறிவுலகத்திற்கு புத்தகம் வாங்கியதில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெற்றதாக தவெக அரசு முன்வைத்துள்ள விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் தினசரி பல்வேறு ஆதாரங்களை தவெக அரசு வெளியிட்டு வருகிறது.

சட்டம் ஒழுங்கை கையில் எடுத்த திமுக:

இந்த சூழலில், பொதுமக்களை துணை சபாநாயகர் தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதும், மறுபக்கம் கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய சம்பவம் பெரும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதை திமுக மிகப்பெரிய அளவில் கையில் எடுத்துள்ளது.

திமுக தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கையில் எடுத்தும், தவெக கடந்த கால திமுக அரசின் புத்தக ஊழல் உள்ளிட்டவற்றை மிகப்பெரிய அளவில் கையில் எடுத்துள்ளதால் தமிழக அரசில் பரபரப்பு உருவாகியுள்ளது. இந்த பரபரப்பான சூழலில், தவெக எம்எல்ஏ-க்கள் அனைவரையும் முதலமைச்சர் விஜய் சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு அழைத்துள்ளார்.

நாளை விஜய் ஆலோசனை:

இந்த சந்திப்பின்போது தவெக எம்எல்ஏ-க்கள் அனைவரையும் விஜய் மிகவும் கடுமையான கண்டிப்பைத் தெரிவிப்பார் என்று கருதப்படுகிறது. சர்ச்சையில் சிக்கும் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் மீதும் கட்சி ரீதியாக நடவடிக்கை எடுப்பார் என்றும் கருதப்படுகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks