TVK Vijay: வார்னிங் மட்டுமா? ஆக்‌ஷன் வருமா? பனையூரில் இன்று தவெக MLA-க்கள் கூட்டம் - CM விஜய் ப்ளான்?
TVK Vijay: வார்னிங் மட்டுமா? ஆக்‌ஷன் வருமா? பனையூரில் இன்று தவெக MLA-க்கள் கூட்டம் - CM விஜய் ப்ளான்?
News Image
TVK Vijay Meeting: தவெக எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கி வரும் நிலையில் இன்றைய ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தவெக ஆலோசனைக் கூட்டம்:
தமிழ்நாட்டின் முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தலைமையில், அக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் காலை 11 மணியளவில் இந்த கூட்டம் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள், மக்கள் பணிகளில் ஈடுபடுவது எப்படி, உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராவாது, அடிமட்டம் வரையில் கட்சி கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்து முதலமைச்சர் விஜய் அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்ச்சைகளில் சிக்கும் தவெக MLA-க்கள்:
கட்சியை வலுப்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் என கூறப்பட்டாலும், தவெக எம்.எல்.ஏக்களை சுற்றி அடுத்தடுத்து வெடித்துள்ள சர்ச்சைகளும் இன்றைய கூட்டத்திற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.  அதன்படி, கோரிக்கைகளை முன்வைத்து பேச வந்த நபரை துணை சபாநாயகர் ரவிசங்கர் சரமாரியாக தாக்கிய விவகாரம், கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ., அருள் விக்னேஷ் அம்மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பியதாக கூறப்படுவது எதிர்க்கட்சிகளால் முக்கிய பிரச்னையாக கையாளப்பட்டுள்ளன. இதுபோக விஜய் பாலாஜி உள்ளிட்ட சில அமைச்சர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களின் செயல்பாடும் கட்சி தலைமைக்கு அதிருப்தியை அளித்துள்ளதாம்.
இதையும் படியுங்கள்: TN Weather News: உருவாகிறது புதிய புயல்..! இன்று எங்கெல்லாம் கனமழை? சென்னை - தமிழக வானிலை அறிக்கை
இந்த அடுத்தடுத்த சர்ச்சைகளுக்கு மத்தியில் தான், விஜய் தலைமையிலான ஒழுங்கு நடவடிக்கைக் குழு கூட்டம் இன்று கூடுகிறது. இதில் கட்சியின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாம். கூட்டத்தின் முடிவில் தொடர்புடைய எம்எல்ஏக்கள் மீது கட்சி ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அதோடு தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்குவதைத் தடுப்பது, பொதுமக்களிடம் எப்படி நடந்து கொள்வது, கட்சியின் நற்பெயருக்குப் பாதிப்பு ஏற்படாமல் செயல்படுவது எப்படி என்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விஜய்யும், பொதுச்செயலாளர் என்.ஆனந்தும் எம்.எல்.ஏக்களுக்கு ஆலோசனைகளை வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீளும் பிரச்னை பட்டியல்:
விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்து 6 மாதங்கள் ஆன நிலையில், கடந்த காலங்களில் இருந்ததை போன்ற ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாமல், லஞ்சம் உள்ளிட்டவை சற்று தணிந்துள்ளதாக பாராட்டப்படுகிறது. ஆனாலும், சட்ட-ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம்சாட்டி வருகின்றன. குறிப்பாக போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சில குற்றங்களில் ஆளுங்கட்சியினரே கைதாகியும் வருகின்றனர். இப்படி முதலமைச்சர் முன்னிலையில் ஏராளமான சவால்கள் இருக்கையில் தான், கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களும் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி தலைவலியை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தான் இந்த விவகாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்றைய ஆலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஊழல் புகாரில் சிக்கினால் எவ்வளவு நெருக்கமானவராக இருந்தாலும், பாரபட்சம் இன்றி பதவிகள் பறிக்கப்படும் என அமைச்சர்களுக்கு முதலமைச்சர் விஜய் பகிரங்க எச்சரிக்கை விடுத்து இருந்தார். அதேபாணியில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் திட்டவட்டமான அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Source: Read Full Article
கருத்துரையிடுக
Please Select Embedded Mode To Show The Comment System.*
புதியது பழையவை
Post Ads 1
Post Ads 2
Whoever You Are, Whatever You Do, Wherever You May Be
When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola
© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks