TVK Ravi Shankar: கெட்ட வார்த்தையில் திட்டி கண்மூடித்தனமாக தாக்கிய துணை சபாநாயகர்? வைரலாகும் வீடியோ!
TVK Ravi Shankar: கெட்ட வார்த்தையில் திட்டி கண்மூடித்தனமாக தாக்கிய துணை சபாநாயகர்? வைரலாகும் வீடியோ!
News Image
தமிழ்நாட்டின் துணை சபாநாயகராகவும், துறையூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராகவும் பொறுப்பு வகிப்பவர் ரவிசங்கர். இவரிடம் அவரது தொகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தண்ணீர் விநியோகம் இல்லை என்று கேட்ட நபரை ரவிசங்கர் தகாத வார்த்தையால் திட்டி கண்மூடித்தனமாக தாக்கியதாக கூறி வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அதிமுக  இந்த விவகாரத்தில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
பொதுமக்களை தாக்கிய துணை சபாநாயகர்?
இதுதொடர்பாக, அதிமுக வெளியிட்ட கண்டன பதிவில், பத்து நாளா தண்ணி வரல அப்டின்னு தன்னோட பகுதியில் உள்ள குறைகளை சொல்ல வந்த கார்த்தி என்பவரை கண்மூடித்தனமாக தாக்கிய துறையூர் தவெக சட்டமன்ற உறுப்பினர் ரவிசங்கர். ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் அந்த தொகுதிக்கான, அந்த தொகுதி மக்களுக்கான எல்லைக் காப்பாளர் அப்டின்னு வசனம் பேசிய ரீல் முதல்வர் விஜய்.
பத்து நாளா தண்ணி வரல அப்டின்னு தன்னோட பகுதியில் உள்ள குறைகளை சொல்ல வந்த கார்த்தி என்பவரை கண்மூடித்தனமாக தாக்கிய துறையூர் தவெக சட்டமன்ற உறுப்பினர் ரவிசங்கர். ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் அந்த தொகுதிக்கான, அந்த தொகுதி மக்களுக்கான எல்லைக் காப்பாளர் அப்டின்னு வசனம் பேசிய ரீல் முதல்வர் @actorVijay அவர்களே! உங்கள் கட்சியின் துறையூர் "எல்லைக் காப்பாளர்" மக்களைக் காப்பாற்றும் லட்சணத்தைப் பார்த்தீர்களா? உங்களுக்கு வாக்களித்த சாமானிய மக்கள் அவங்களோட குறைகளை சொல்ல வந்தா அடிப்பீங்களா? மேலும் அவர் பயன்படுத்திய வார்த்தைகள்! ஒரு சட்டமன்ற உறுப்பினர் தன்னுடைய தொகுதி மக்களிடம் பயன்படுத்தக் கூடிய வார்த்தைகளா இவை! இப்படி மக்களை காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய துறையூர் ஆச்சரியக்குறி சட்டமன்ற உறுப்பினர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்? இல்லை இதனையும் வாய் மூடி மௌனியாக வேடிக்கைதான் பார்க்கப் போகிறீர்களா? @TVKVijayHQ #பொய்க்கால்_குதிரை_அரசு
— AIADMK (@AIADMKOfficial) November 9, 2026
எல்லைக் காப்பாளர் லட்சணம்:
உங்கள் கட்சியின் துறையூர் "எல்லைக் காப்பாளர்" மக்களைக் காப்பாற்றும் லட்சணத்தைப் பார்த்தீர்களா? உங்களுக்கு வாக்களித்த சாமானிய மக்கள் அவங்களோட குறைகளை சொல்ல வந்தா அடிப்பீங்களா? மேலும் அவர் பயன்படுத்திய வார்த்தைகள்! ஒரு சட்டமன்ற உறுப்பினர் தன்னுடைய தொகுதி மக்களிடம் பயன்படுத்தக் கூடிய வார்த்தைகளா இவை!
இப்படி மக்களை காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய துறையூர் ஆச்சரியக்குறி சட்டமன்ற உறுப்பினர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்? இல்லை இதனையும் வாய் மூடி மௌனியாக வேடிக்கைதான் பார்க்கப் போகிறீர்களா?
இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.
நடந்தது என்ன?
மேலும், தாக்குதலில் காயமடைந்ததாக கூறப்படும் கார்த்திக் என்பவர் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது, நான் துறையூர் சட்டமன்றத்தில் வசித்துக் கொண்டிருக்கிறேன். சுமார் 90 நாட்களாக என்னுடைய பகுதியில் தண்ணீர் இல்லை. பல முறை நகராட்சியில் எல்லாம் புகார் அளித்தேன்.
நாங்கள் ஓட்டுப்போடாமல் அவர் துணை சபாநாயகர் ஆகிவிட்டார்? அவர் பொதுமக்கள் அழைப்பை எடுப்பதில்லை. இன்று யதார்த்தமாக சாமி கும்பிட போனேன். அவர் வீட்டில் விளக்கு எரிந்தது. கார் நின்றது. அரசு கார் இருந்தது என்பதால்தான் சென்றேன்.
துறையூர் சட்டமன்ற உறுப்பினரும் துணை சபாநாயகருமான ரவிசங்கர் அவர்களால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்ட கார்த்தி என்பவர் அளித்த வாக்குமூலம்தான் இது.. என்னுடைய பகுதி குறைகளை சொல்லப் போனதுக்கு என்னைய போட்டு அடிச்சு கேவலப்படுத்திட்டாங்க. மாற்றம் என்று உங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு நீங்கள் செய்யும் நன்றிக்கடன் இதுதானா? @TVKVijayHQ இதுவா தூயசக்தி? #பொய்க்கால்_குதிரை_அரசு
— AIADMK IT WING (@AIADMKITWINGOFL) November 9, 2026
இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியுள்ளார்.
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து முதலமைச்சர் விஜய் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளது.
Source: Read Full Article
கருத்துரையிடுக
Please Select Embedded Mode To Show The Comment System.*
புதியது பழையவை
Post Ads 1
Post Ads 2
Whoever You Are, Whatever You Do, Wherever You May Be
When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola
© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks