Toll Gate: வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்! இனி டிராபிக் ஜாம் தொல்லையே இருக்காது! பரனூரைத் தொடர்ந்து நெமிலியிலும்!

Toll Gate: வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்! இனி டிராபிக் ஜாம் தொல்லையே இருக்காது! பரனூரைத் தொடர்ந்து நெமிலியிலும்!
News Image

தமிழகத்தில் 6,600 கி.மீ. தேசிய நெடுஞ்சாலைகள், அண்டை மாநிலங்களுடன் இணைக்கப்பட்டு உள்ளன. இவற்றின் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான சரக்கு வாகனங்கள், அரசு மற்றும் ஆம்னி பேருந்துகள் உள்ளிட்டவை பயணித்து வருகின்றன. இச்சாலைகளை பயன்படுத்தும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்க தமிழகம் முழுவதும் 78 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 68, தமிழக அரசின் கட்டுப்பாட்டில் 10 சுங்கச்சாவடிகளும் உள்ளன.

சுங்கச்சாவடிகளால் போக்குவரத்து நெரிசல்

இந்நிலையில் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் லட்சக்கணக்கான வாகனங்கள் ஒரே நேரத்தில் சென்னை மற்றும் பிற முக்கிய நகரங்களுக்குப் பயணிப்பதால் பரனூர், விக்கிரவாண்டி உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் கிலோமீட்டர் கணக்கில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்து வந்தனர்.

தானியங்கி சுங்கக்கட்டணம்

இந்நிலையில் சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில் தடையற்ற சுங்கக்கட்டணம் வசூலிக்கும் முறை அமல்படுத்தப்பட்டு வருகிறது. சுங்கச்சாவடிகளில் தடுப்புகள் எதுவும் இல்லாமல் தானியங்கி கேமராக்கள் மூலம் வாகனங்களின் நம்பர் பிளேட் மற்றும் பாஸ்டேக் போன்றவை ஒருங்கிணைக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த தடையற்ற தானியங்கி சுங்கக்கட்டணம் நடைமுறை தமிழகத்தில் முதல் முறையாக செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடியில் கடந்த 2026ம் ஆண்டு அக்டோபர் மாதம்  இந்த வசதி கொண்டு வரப்பட்டது.

மக்களை மையமாகக் கொண்ட டிஜிட்டல் நிர்வாகத்தை உருவாக்க வேண்டும் என்ற மத்திய அரசின் நோக்கத்திற்கு ஏற்ப இந்தத் தொழில்நுட்ப வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் பரனூர் சுங்கச்சாவடியில் தற்போது வாகனங்கள் எந்தவித காத்திருப்பும் இல்லாமல் தானியங்கி முறையில் சுங்கக்கட்டணம் செலுத்திவிட்டு செல்வதால் அந்த பகுதியில் வாகன நெரிசல் முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது. இதனை வாகன ஓட்டிகள் வரவேற்றுள்ளனர்.

வாகன ஓட்டிகள் கோரிக்கை

இந்நிலையில் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் இந்த நடைமுறையை கொண்டு வர வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர். இதற்கிடையே தற்போது சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு வசதியாக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள நெமிலி சுங்கச்சாவடியில் தடையில்லா சுங்கக்கட்டணம் வசூலிக்கும் முறை நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. சுங்கச்சாவடிகளில் ஏ.ஐ.தொழில் நுட்பத்துடன் உள்ள கேமராக்கள் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள பாஸ்டேக், வாகனங்களின் பதிவு எண்ணை ஒப்பிட்டு அதனுடன் இணைக்கப்பட்டுள்ள கணக்கில் இருந்து சுங்கக்கட்டணம் தானாகவே கழிக்கப்படும்.

இருமடங்கு அபராதம்

இந்த முறையில் மனிதர்களின் நேரடித் தலையீடு பெருமளவு குறைக்கப்படுகிறது. இதனால், சுங்கச்சாவடிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறைக்கப்படுவதுடன், பயண நேரமும் குறையும். எரிபொருள் செலவு குறைவதோடு, வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையும் மாசுபாடும் குறையும். தமிழகத்தில் தடையில்லா சுங்கக்கட்டண வசூல் முறை பரனூரை தொடர்ந்து நெமிலி சுங்கச்சாவடியில் கொண்டு வரப்பட்டுள்ளது. படிப்படியாக அனைத்து சுங்கச்சாவடிகளிலும் இந்த நடைமுறை கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்டேக்கில் போதுமான பணம் இல்லை என்றாலோ செல்லாத பாஸ்டேக் வைத்திருந்தாலோ சுங்கக்கட்டணத்தை போல் இருமடங்கு அபராதம் விதித்து மின்னணு நோட்டீஸ் அனுப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks