தங்கம் ஆண்கள் முதல் பெண்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. தங்கத்தின் விலையானது எப்போது இல்லாத வகையில் கிடுகிடுவென உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இந்த நகை விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் செப்டம்பர் மாதத்தில் தங்கம் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் அக்டோபர் மாதம் தொடங்கியதும் தங்கம் விலை சரசரவென குறைந்து வந்தது. தற்போது நவம்பர் மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருது நகைப்பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய தங்கம் விலை உயர்ந்ததா? குறைந்ததா? என்பதை பார்க்கலாம்.

நேற்று தங்கம் ஒரு கிராமிற்கு ரூ.25 உயர்ந்து ரூ. 12,800க்கும், ஒரு சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.1,02,400க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இதையும் படிங்க: Gold Rate Today: தீபாவளிக்கு முன் அதிர்ச்சி! மீண்டும் ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை..! வெள்ளி நிலவரம் என்ன?

தங்கம் விலை உயர்வு

இந்நிலையில் இன்றைய (நவம்பர் 04) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.1,02,600ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ. 12,825ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 13,991ஆக விற்பனையாகிறது. சவரன் ரூ. 1,11,928ஆக விற்பனையாகிறது. தீபாவளி நெருங்கம் நிலையில் தொடர்ந்து மூன்று நாட்களாக உயர்ந்து வருகிறது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் ரூ.760 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி விலை

வெள்ளி விலை கடந்த சில நாட்களாக சரசரவென குறைந்த வந்த நிலையில் இன்றும் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் நீடிக்கிறது. ஒரு கிராம் விலை ரூ.200க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.2,00,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Source: Read Full Article