TN Weather Update: தீபாவளி கொண்டாடுன மாதிரிதான்..! காலை முதல் வெளுத்து வாங்கும் மழை! 27 மாவட்டங்களில் இன்னைக்கு இப்படித்தான்!

TN Weather Update: தீபாவளி கொண்டாடுன மாதிரிதான்..! காலை முதல் வெளுத்து வாங்கும் மழை! 27 மாவட்டங்களில் இன்னைக்கு இப்படித்தான்!
News Image

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே மழை தொடர்ந்து பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியது முதல் தொடர்ந்து பெய்து வந்த மழை, பின்னர் முரசு புயல் காரணமாக தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும் தீவிரமாக பெய்தது. குறிப்பாக, தென் தமிழகத்தில் மழை கொட்டித் தீர்த்தது.

தொடங்கியது மழை:

தமிழ்நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டின் பல இடங்களிலும் காலையிலே மழை பெய்யத் தொடங்கியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் காலையிலே மழை பெய்த நிலையில், சென்னையிலும் பல இடங்களில் மழை பெய்து வருகிறது.

7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழ்நாட்டில் இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

நாளை எப்படி?

மேலும், திங்கட்கிழமையான நாளையும் தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.

நீலகிரி , கோயம்புத்தூர், திருப்பூர், விருதுநகர், திண்டுக்கல், மதுரை, தேனி, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

இவ்வாறு வானிலை ஆய்வு மைய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை முதல் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகி வருகின்றனர். தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசுகள்தான் அனைவரது நினைவுக்கும் முதலில் வரும். ஆனால், மழை காரணமாக இன்று பட்டாசு வெடிக்க இயலாத நிலை ஏற்பட்டிருப்பதால் சிறுவர்கள், இளைஞர்கள் வேதனை அடைந்துள்ளனர். மேலும், காலையிலே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடைகளில் நடக்கும் வியாபாரமும் இதனால் சற்று மந்தமாகியுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks