Tamil Nadu Weather Update (02-11-2026): வங்கக் கடலில் தீவிரமடைந்துள்ள முரசு (Murasu Cyclone) புயல் நாளை காலை ஆந்திராவில் கரையை கடக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

வங்கக் கடலில் முரசு புயல்..!

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேற்கு மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடாப் பகுதியில் நிலைகொண்டிருந்த முரசு புயலானது, மணிக்கு 20 கி.மீ. வேகத்தில் ஏறக்குறைய வடமேற்குத் திசையில் நகர்ந்து, கடுமையான புயலாக வலுப்பெற்றது. இன்று, நவம்பர் 2, 2026, இந்திய நேரப்படி அதிகாலை 02:30 மணியளவில், அட்சரேகை 13.6°N மற்றும் தீர்க்கரேகை 82.5°E-க்கு அருகிலுள்ள அதே பகுதியில் மையம் கொண்டிருந்தது. தமிழ்நாட்டின் சென்னைக்குக் கிழக்கு-வடகிழக்கே சுமார் 260 கி.மீ., ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூருக்குக் கிழக்கு-தென்கிழக்கே 290 கி.மீ., ஆந்திரப் பிரதேசத்தின் மச்சிலிப்பட்டணத்திற்குக் தெற்கு-தென்கிழக்கே 320 கி.மீ., காவலிக்குக் கிழக்கு-தென்கிழக்கே 310 கி.மீ., ஒங்கோலுக்குத் தென்கிழக்கே 330 கி.மீ. மற்றும் விசாகப்பட்டணத்திற்குத் தெற்கே 470 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

தீவிர புயலான முரசு..!

இது தொடர்ந்து வடமேற்குத் திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திராவைக் கடக்க அதிக வாய்ப்புள்ளது. 2026 நவம்பர் 2 ஆம் தேதி நள்ளிரவு (2330 மணி) முதல் 3 ஆம் தேதி அதிகாலை (0400 மணி) வரை, ஒங்கோலுக்கு அருகிலுள்ள நெல்லூர் மற்றும் நர்சாபூர் இடையே பிரதேச கடற்கரையில் மணிக்கு 100 முதல் 110 கி.மீ வேகத்தில் காற்று வீசும், சில சமயங்களில் மணிக்கு 120 கி.மீ வேகத்தில் திடீரென அதிகரிக்கும் தீவிர புயலாக இது உருவாகும்” என இன்று காலையில் வெளியான அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன் தொடர்ச்சியாக அடுத்த சிறிது நேரத்திலேயே முரசு புயல் தீவிரமானதாக வலுப்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: School Leave: முரசு புயல்..! தொடர்ந்து கொட்டும் கனமழை - இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

இன்று எங்கெல்லாம் கனமழை பொளக்கும்?

இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முரசு புயலின் விளைவாக இன்று சென்னை மற்றும் திருவள்ளூர், மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு

03-11-2026: நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில், இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

சென்னை பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன/மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்” என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Source: Read Full Article