TN Govt: இனி அரசு அனுமதி இன்றியே வீடு கட்டலாம்..! வீட்டு வசதித்துறை அதிரடி உத்தரவு - முழு விவரம் இதோ

TN Govt: இனி அரசு அனுமதி இன்றியே வீடு கட்டலாம்..! வீட்டு வசதித்துறை அதிரடி உத்தரவு - முழு விவரம் இதோ
News Image

TN Govt Third Party Certification Scheme:  வீட்டுவசதிதுறையின் புதிய திட்டத்தால், தமிழகத்தில் வீடு கட்ட இனி அரசு அதிகாரியின் அனுமதி அவசியமில்லை என்ற சூழல் உருவாகியுள்ளது.

இனி வீடு கட்ட அலைய வேண்டியதில்லை:

தமிழ்நாட்டில் வீடு மற்றும் வணிக வளாகங்களை கட்ட நிலத்தின் அளவு மற்றும் திட்டமிடப்பட்டுள்ள கட்டிடத்தின் உயரத்திற்கு ஏற்ப அனுமதிகளை பெற வேண்டியது கட்டாயம். இதற்காக உரிய அரசு அதிகாரியின் அனுமதியை பெறுவது நீண்ட நடைமுறையை உள்ளடக்கியுள்ளது. ஆனால், அதனை எளிமையாக்கி மக்கள் எளிதில் தங்களது வீடு மற்றும் வணிக வளாக கட்டிடங்களுக்கான அனுமதிகளை பெற தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, அரசின் கட்டிட விதிகளில் புதியதாக மூன்றாம் தரப்பு சான்றிதழ் என்ற புதிய திட்டத்தை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் தமிழகத்தில் வீடு கட்ட இனி அரசு அதிகாரியின் அனுமதி அவசியமில்லை என்ற சூழல் உருவாகியுள்ளது.

வீட்டு வசதித்துறை புதிய அறிவிப்பு:

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, “இனி சின்ன கட்டிடங்களுக்கு DTCP / CMDA அதிகாரி அனுமதியை கோர வேண்டிய அவசியமில்லை. அரசு அங்கீகரித்த மூன்றாம் தரப்பு  கட்டிட வடிவமைப்பாளர் / Grade-I பதிவு செய்யப்பட்ட பொறியாளர் (Single Window Portal-ல் பதிவு செய்தவர்) தான் அனுமதி கொடுப்பார்கள். அனுமதி அளிப்பதில் மோசடி செய்தால் BNS 236-ன் கீழ் குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டு, கட்டிட வடிவமைப்பாளர் அல்லது பொறியாளர் இனி அந்த பணிகளில் ஈடுபடவே முடியாதபடி நடவடிக்கை பாயும் என அரசு எச்சரித்துள்ளது.

இதையும் படியுங்கள்: TN Weather News: இன்று உருவாகிறது புயல்? மீனவர்களுக்கு வார்னிங், எங்கெல்லாம் மழை- தமிழக வானிலை அறிக்கை

எந்தெந்த கட்டிடங்களுக்கு புது திட்டம் பொருந்தும்?

1. வீடு

- FSI Area - 750 ச.மீ வரை
- உயரம் 14 மீட்டர் வரை (Stilt + 3 தளம் / Ground + 2 தளம்)
- 8 குடியிருப்பு வரை

2. கடை / வணிக வளாகம்

- FSI Area - 300 ச.மீ வரை
- உயரம் 14 மீட்டர்  (Stilt+3 / G+2)

3. தொழிற்சாலை

- White / Green Category மட்டும்
- SIPCOT, SIDCO, ELCOT அல்லது அங்கீகரிக்கப்பட்ட Industrial Layout-ல்
- FSI Area - 2500 ச.மீ வரை, உயரம் 18.30 மீ

எந்தெந்த கட்டிடங்களுக்கு இது பொருந்தாது?

CRZ கடற்கரை பகுதி, மலைப்பகுதி (HACA), பாதுகாக்கப்பட்ட பகுதி, சூழலியல் உணர்திறன் மிக்க பகுதி, நத்தம் நிலம், விவசாய நிலம், நிறுவன ரீதியான அபாயகரமான பகுதிகள், தொழிற்சாலை (White/Green தவிர),திறந்தவெளி, நகர்ப்புறம் அல்லாத மண்டலம், தெரு சீரமைப்பு, சாலை விரிவாக்க இடங்கள் - இங்கெல்லாம் இந்த திட்டம் செல்லாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் விண்ணப்பமும், அனுமதி முறையும்..

இந்த நடைமுறையில் முழுமையாக Tamil Nadu Single Window Portal மூலமாக ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்கு புவியியல் குறியீட்டுடன் கூடிய நிலத்தின் புகைப்படம், பத்திரம், பட்டா / TSLR - Third Party சான்று செய்தது, அங்கீகரிக்கப்பட்ட லே-அவுட்/ 20.10.2016 முன் பதிவு செய்த பத்திரம், கட்டிட திட்டம், ஆய்வு அறிக்கை, கள ஆய்வு அறிக்கை ஆகியவை அவசியம். அனுமதி அளிக்கும் மூன்றாம் தரப்பு கட்டிட வடிவமைப்பாளர்/ பொறியாளர் நேரில் ஆய்வு செய்து: பொது சாலை உள்ளதா, அணுகு சாலை அகலம், Master Plan விதிகள் படி உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டியது கட்டாயம்.

உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து கட்டணம் கட்டியதும், உடனடியாக ஆன்லைனில் QR Code உடன் Approved Plan & Proceedings ஆவணங்களை தரவிறக்கம் செய்யலாம்

10% கட்டிடங்கள் மட்டும் அதிகாரிகளால் திடீர் ஆய்விற்கு உட்படுத்தப்படும்

வழங்கப்படும் சான்று 5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும், மேலும் 3 ஆண்டுகளுக்கு அதனை நீட்டித்துக்கொள்ளலாம்

இந்த திட்டத்தால் சிறிய வீடு மற்றும் வணிக வளாகங்களை கட்டுவதற்கான வேலைகள் வேகமெடுக்கும். அரசு வேலை சுலபமாகும் நேரத்தில் கட்டிட வடிவமைப்பாளரையே முழு பொறுப்பும் சேரும்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks