TN Govt: 17 கொலைகள் உண்மைதான்..! ஆளுநருக்கு பறந்த ரிப்போர்ட் - எதிர்க்கட்சிகளுக்கு விஜய் அரசு பதிலடி

TN Govt: 17 கொலைகள் உண்மைதான்..! ஆளுநருக்கு பறந்த ரிப்போர்ட் - எதிர்க்கட்சிகளுக்கு விஜய் அரசு பதிலடி
News Image

TN Govt On Law And Order: தமிழ்நாட்டின் சட்ட-ஒழுங்கு தொடர்பாக மாநில அரசு வழங்கியுள்ள விரிவான அறிக்கையுடன், நாளை ஆளுநர் டெல்லி செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

தீபாவளி தினத்தன்று அரங்கேறிய கொலைகள்:

கடந்த தீபாவளி தினத்தன்று தொடங்கி திங்கட்கிழமை காலை வரை, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் அடுத்தடுத்து கொலைகள் அரங்கேறின. இந்த எண்ணிக்கை 17 ஆக பதிவானதாக கூறப்படுவதை கையிலெடுத்த திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கே இல்லை, காவல்துறை மீது குற்றவாளிகளுக்கு பயமில்லை மற்றும் ரவுடி ராஜ்ஜியம் நடைபெற்று வருகின்றனது என மிகவும் காட்டமான விமர்சனங்களை முன்வைத்தன. இதையடுத்து, தமிழ்நாட்டில் நிலவும் சட்ட-ஒழுங்கு தொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும்படி, மத்திய உள்துறை அமைச்சகம் தமிழ்நாடு ஆளுநர் அர்லேகரிடம் வலியுறுத்தி இருந்தது.

தமிழ்நாடு அரசு ஆலோசனையும், அறிக்கையும்..!

தீபாவளி சம்பவங்களை தொடர்ந்து சட்ட-ஒழுங்கு தொடர்பாக முதலமைச்சர் விஜய் தலைமையில், அடுத்தடுத்த இரண்டு நாட்களும் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர். அதன்பிறகு ஒவ்வொரு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமிருந்தும் விரிவான தகவல்களை சேகரித்து, தீபாவளி தினத்தன்று அரங்கேறிய ஒவ்வொரு கொலைக்கும் பின்புலமாக இருக்கும் காரணம் என்ன, யார் கைது, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது போன்ற விரிவான அறிக்கை ஒன்று, அரசு தரப்பில் ஆளுநரிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: TN Weather News: தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இன்று மழைக்கு வாய்ப்பு? சென்னை? மீனவர்களுக்கு அலெர்ட் - வானிலை அறிக்கை

அறிக்கையில் உள்ள முக்கிய விவரங்கள் என்ன?

அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாக கிடைத்துள்ள தகவல் கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

1. ”17 கொலைகளும் ஒரே காரணத்திற்காக அல்ல”

17 கொலைகளும் தமிழ்நாடு வெவ்வேறு இடங்களில், பல விதமான காரணங்களுக்காக அரங்கேறியுள்ளன. முன்விரோதம், குடும்ப சண்டை, சொத்து தகராறு, மது போதையில ஏற்பட்ட வாய் தகராறு, காதல் விவகாரம் என காரணங்கள் மாறுபட்டுள்ளன. இது பொது மக்களுக்கு எதிரான கலவரமோ, சட்டம் ஒழுங்கு சீர்குலைவோ கிடையாது.  கடை அடைப்புகள், போக்குவரத்து சேவை பாதிப்பு, மக்கள் வீட்டை விட்டு வெளிய வர முடியாத நிலைமை போன்ற எந்தவொரு அசம்பாவிதங்களும் நிகழவில்லை.

2. காவல்துறை உடனடி நடவடிக்கை

கொலை சம்பவங்களை அரசு அரசு மூடி மறைக்கவில்லை. அனைத்து சம்பவங்கள் தொடர்பாகவும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளன. தேனி சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் கொலை வழக்கு உட்பட அனைத்து வழக்குகளிலும் குற்றவாளிகள் பிடிபட்டுள்ளனர்.

3. மாநிலம் முழுவதும் தேடுதல் வேட்டை:

தீபாவளி சம்பவங்களை தொடர்ந்து மாநிலம் முழுவதும் ரோந்து பணியை காவல்துறை தீவிரப்படுதியுள்ளது. ரவுடிகள், பழைய குற்றவாளிகள், கஞ்சா, சாராயம் விற்பனை செய்பவர்கள், ஆயுதங்களை வைத்துக்கொண்டு உலா வருபவர்கள் என மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இரவு ரோந்து, வாகன சோதனை, ரவுடிகள் வீடுகளில் திடீர் சோதனை என காவல்துறை தீவிரமான பணிகளில் ஈடுபட்டுள்ளது.

4. மக்கள் நிம்மதியாக உள்ளனர்

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்னை பெரிய அளவில் இல்லை. தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளனர். பட்டாசு கடை, கோவில், சந்தை, பேருந்து நிறுத்தம் என அனைத்துமே வழக்கம்போல் இருந்தன. எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளின்படி தமிழ்நாடு பதற்றத்தில் இல்லை.

ஆளுநர் டெல்லி பயணம்:

தமிழ்நாடு அரசின் இந்த விரிவான அறிக்கையை ஏற்று ஆளுநர் அர்லேகர் நாளை டெல்லி சென்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரடியாக சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது "தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருக்கிறது. அரசு துரிதமாக நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் அரசியல் காரணங்களால் சம்பவங்களை மிகைப்படுத்துகின்றன" என ஆளுநர் விளக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், கொலை சம்பவங்கள் நடந்தது உண்மை, அதை யாரும் மறுக்கவில்லை. அதற்காக ஒட்டுமொத்த தமிழ்நாடே கலவர பூமியாக மாறிவிட்டது என எதிர்க்கட்சிகள் கூறுவது காழ்ப்புணர்ச்சியால் மட்டுமே எனவும் அரசு தரப்பில் ஆளுநரிடம் விளக்கப்பட்டுள்ளதாம்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks