Tasmac Case: ரத்தீஷிற்கு இண்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ்..! ரூ.1000 கோடி ஊழல் வழக்கில் முக்கிய தலைகள், திமுக?

Tasmac Case: ரத்தீஷிற்கு இண்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ்..! ரூ.1000 கோடி ஊழல் வழக்கில் முக்கிய தலைகள், திமுக?
News Image

Tasmac Case Ratheesh: திமுக ஆட்சியில் நடைபெற்றதாக கூறப்படும் டாஸ்மாக் ஊழல் வழக்கில் ரத்தீஷ் கைதானால், பல முக்கிய தலைகள் சிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரத்தீஷிற்கு ரெட் கார்னர் நோட்டீஸ்?

கடந்த திமுக ஆட்சியில் டாஸ்மாக் அமைப்பில் மதுபானங்களை வாங்குவது, விநியோகிப்பது உள்ளிட்ட பல்வேறு அரசு பணிகளில், அதிகாரப்பூர்வமற்ற முறையில் தலையீடு செய்து ரத்தீஷ் ஆதிக்கம் செலுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நடவடிக்கைகளால் ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் அரங்கேறியுள்ளதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. ஆனால், ரத்தீஷ் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளார்;. அவருக்கு லுக் அ-அவுட் நோட்டீஸும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் சர்வதேச காவல்துறை அமைப்பான இன்டர்போல், ரத்தீஷிற்கு எதிராக ரெட்கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமலாக்கத்துறை மற்றும் மத்திய விசாரணை அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று, தற்போது இன்டர்போல் அமைப்பு ரத்தீஷுக்கு எதிராக அதிகாரப்பூர்வமாக ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் அவர் விரைவில் கைது செய்யப்பட்டு இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ரெட் கார்னர் நோட்டீஸ் - பலன் என்ன?

குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டுவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று தலைமறைவாகும் நபர்களை,  கைது செய்துஉரிய நாடுகளுக்கு திருப்பி அனுப்ப இன்டர்போல் பிறப்பிக்கும் மிக உயரிய எச்சரிக்கை அறிவிப்பே 'ரெட் கார்னர் நோட்டீஸ்' ஆகும். இந்த நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டால்.

இன்டர்போல் அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள 190-க்கும் மேற்பட்ட நாடுகளின் காவல்துறை மற்றும் குடியேற்றத் துறை அதிகாரிகளுக்கு குறிப்பிட்ட நபரின் அனைத்து விவரங்களும் அனுப்பப்படும்

சம்பந்தப்பட்ட நபர் எந்த நாட்டில் தங்கியிருந்தாலும் அல்லது மற்றொரு நாட்டிற்கு விமானம் மூலம் பயணிக்க முயன்றாலும், அந்நாட்டுக் காவல்துறையினர் அவரை உடனடியாகக் கைது செய்து தடுப்புக் காவலில் வைக்க முடியும்

வெளிநாட்டில் குறிப்பிட்ட நபர் கைது செய்யப்பட்டவுடன், இந்திய வெளியுறவுத் துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சட்டப்பூர்வ ஆவணங்களைச் சமர்ப்பித்து அவரை இந்தியாவுக்கு அழைத்து வரலாம்

இதையும் படியுங்கள்: TN Weather News: வேகமெடுக்கும் அக்வான் புயல், தமிழக மீனவர்களுக்கு வார்னிங், இன்று எங்கெல்லாம் மழை? வானிலை அறிக்கை

டாஸ்மாக் ஊழல் வழக்கு பின்னணி..

திமுக ஆட்சியில் செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்த போது டாஸ்மாக்கில் பார் டெண்டர் , டிரான்ஸ்போர்ட் ஒப்பந்தங்கள், புதிய மதுபானங்களுக்கு அனுமதி வழங்குவது ஆகியவற்றில் முறைகேடுகள் நடைபெற்றதாக அடுத்தடுத்து குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பான வழக்கில் செந்தில் பாலாஜி மற்றும் ரத்தீஷ் உள்ளிட்டோர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த முறைகேட்டில் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அவர் மீது அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்நிலையில் தான் துபாயில் தலைமறைவாக இருப்பதாக முதலமைச்சர் விஜயால் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட, ரத்தீஸிற்கு எதிராக இன்டர்போல் அமைப்பு ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

சிக்கப்போகும் முக்கிய தலைகள்?

டாஸ்மாக் முறைகேடு வழக்கு மட்டுமின்றி மேலும் பல வழக்குகளில் ரத்தீஷ் பெயர் அடிபடும் நிலையில், அவர் கைது செய்யப்பட்டால் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக முன்னாள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடனும் அவர் மிகவும் நெருக்கமாக இருந்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில் ரத்தீஷ் கைது செய்யப்பட்டால், பல்வேறு ரகசிய ஒப்பந்தங்கள், முறைகேடுகள் அம்பலமாகி தமிழ்நாடு அரசியலில் புயலை கிளப்ப வாய்ப்புள்ளதாம்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks