Sterlite: ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு.. உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு கூடுதல் நிவாரணம்! எவ்வளவு தெரியுமா?

Sterlite: ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு.. உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு கூடுதல் நிவாரணம்! எவ்வளவு தெரியுமா?
News Image

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் தாமிர ஆலையிலிருந்து வெளியேறிய நச்சுப் புகையாலும் கழிவுகளாலும் நிலத்தடி நீர் மற்றும் பொதுமக்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டனர். இதனையடுத்து ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் அவ்வப்போது போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச்சூடு

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் 22ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி அப்பகுதி சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அமைதியான முறையில் பேரணியாக சென்றனர். அப்போது  ஸ்டெர்லைட் போராட்டக்குழுவினர், வேடிக்கை பார்த்து நின்ற மக்கள் மீது போலீசார் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் துடிதுடித்து உயிரிழந்தனர். 40 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அருணா ஜெகதீசன் ஆணையம் விசாரணை நடத்தியது. இந்நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் நீண்ட கால  கோரிக்கைகளை ஏற்று கூடுதல் நிவாரணத்தை முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: School Holiday: பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! தீபாவளியை போன்று 3 நாட்கள் தொடர் விடுமுறை! எப்போது தெரியுமா?

கூடுதல் நிவாரணம்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:  தூத்துக்குடி மாவட்டத்தில் 22.05.2018 மற்றும் 23.05.2018 ஆகிய நாட்களில் நடைபெற்ற ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை எதிர்ப்புப் போராட்டத்தின்போது உயிரிழந்த 13 நபர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.25 இலட்சமும் மற்றும் கொடுங்காயமடைந்த 40 நபர்களுக்குத் தலா ரூ.5 இலட்சமும் நிவாரண நிதியாக ஏற்கெனவே வழங்கப்பட்டது.

முதல்வர் விஜய்

இந்நிலையில், இப்போராட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கூடுதல் நிவாரணம் வழங்கிடக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் முறையிட்டதன்பேரில், அதனைக் கனிவுடன் பரிசீலனை செய்து, நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரையின்படி, இப்போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் 13 குடும்பங்களுக்கு வழங்கவேண்டிய தலா ரூ.50 இலட்சத்தில் ஏற்கனவே வழங்கிய ரூ.25 இலட்சம் போக மீதமுள்ள தொகையான தலா ரூ.25 இலட்சம் வீதம் ரூ.3.25 கோடியும், கொடுங்காயமடைந்த 40 நபர்களுக்கு வழங்கவேண்டிய தலா ரூ.10 இலட்சத்தில் ஏற்கனவே வழங்கிய ரூ.5 இலட்சம் போக மீதமுள்ள தொகையான தலா ரூ.5 இலட்சம் வீதம் ரூ.2 கோடியும் என மொத்தம் ரூ.5.25 கோடி கூடுதல் நிவாரண நிதியாக வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks