Skanda Sashti festival 2026: அரோகரா..! தொடங்கியது கந்தசஷ்டி திருவிழா! திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்!

Skanda Sashti festival 2026: அரோகரா..! தொடங்கியது கந்தசஷ்டி திருவிழா! திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்!
News Image

தமிழ்க் கடவுளாக உலகெங்கும் வாழும் தமிழர்களால் போற்றி வணங்கப்படும் கடவுள் முருகப்பெருமான். முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த விசேஷங்களில் ஒன்று சஷ்டி பெருவிழா.

தொடங்கியது கந்தசஷ்டி திருவிழா:

உலகெங்கும் வாழும் முருக பக்தர்களால் கோலாகலமாக கொண்டாடப்படும் இந்த கந்த சஷ்டி பெருவிழாவை இன்று தொடங்குகிறது. அறுபடை வீடுகளில் 2வது வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா இன்று தொடங்கியது.

கந்தசஷ்டி திருவிழாவிற்காக நள்ளிரவு 1.30 மணியளவில் விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் முருகப்பெருமானுக்கு நடைபெற்றது. அதிகாலை 5 மணியளவில் சுவாமி ஜெயந்தியாக பக்தர்களுக்கு காட்சி தந்த நிலையில், கந்தசஷ்டி பெருவிழா காலை 7 மணிக்கு தொடங்கியது.

யாகசாலை பூஜையுடன் தொடங்கிய இந்த கந்தசஷ்டி திருவிழாவின் தொடக்கத்தை முன்னிட்டு பக்தர்கள் திருச்செந்தூரில் குவியத் தொடங்கியுள்ளனர். காலை 9 மணிக்கு முருகப்பெருமானுக்கு உச்சிகால அபிஷேகமும், தீீபாராதனையும் நடைபெற உள்ளது.

களைகட்டிய முருகன் கோயில்கள்:

இன்று கந்தசஷ்டி பெருவிழா தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் உள்ள முருகன் கோயில்களில் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகளும், யாகங்களும் தொடங்கி நடைபெற்று வருகிறது. கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதர அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, பழமுதிர்ச்சோலை மற்றும் திருத்தணியிலும் பக்தர்கள் கூட்டம் அதிகளவு காணப்படுகிறது. சென்னையில் புகழ்பெற்ற வடபழனி கோயிலிலும் பக்தர்கள் கூட்டம் அதிகளவு காணப்படுகிறது.

சூரசம்ஹாரம்:

பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்வதற்காக அறநிலையத்துறை சார்பில் போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கந்த சஷ்டி பெருவிழாவின் புகழ்பெற்ற நாளான சூரசம்ஹார நாள் வரும் வியாழக்கிழமை நடக்கிறது.

திருச்செந்தூரில் நடக்கும் சூரசம்ஹாரம் உலகப்புகழ்பெற்றது என்பதால் அதைக் காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவது வழக்கம். திருச்செந்தூர் கடற்கரையில் நடக்கும் இந்த சூரசம்ஹார நிகழ்வைக் காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள் என்பதால் அதற்கான முன்னேற்பாடுகள் தற்போது முதலே தொடங்கப்பட்டுள்ளது.

சிறப்பு பேருந்துகள்:

கந்தசஷ்டி பெருவிழா தொடங்கியுள்ளதால் திருச்செந்தூர் உள்பட தமிழ்நாட்டில் முருக பக்தர்கள் அதிகளவு குவியும் கோயில்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க அரசு சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  சூரசம்ஹார நிகழ்வைத் தொடர்ந்து வரும் வியாழக்கிழமைக்கு அடுத்த நாளான திருவிழாவின் 7ம் நாளான வெள்ளிக்கிழமை 16ம் தேதி மாலை 6 மணியளவில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

தவெக ஆட்சி அமைந்த பிறகு நடக்கும் முதல் கந்தசஷ்டி பெருவிழா என்பதால் அரசுக்கு நற்பெயர் அமையும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளை செய்ய அமைச்சர், அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

குவியும் பக்தர்கள்:

கந்தசஷ்டி திருவிழா இன்று தொடங்கியுள்ளதை முன்னிட்டு முருகன் கோயில்கள் மட்டுமின்றி திருவண்ணாமலை உள்பட இதர கோயில்களிலும் சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும் நடைபெற்று வருகிறது. அதிகாலை முதலே கோயில்களில் பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கந்தசஷ்டி திருவிழா தொடங்கியிருப்பதால் இன்று முதல் முருக பக்தர்கள் மாலை அணிந்தும், விரதம் இருந்தும் தங்களது நேர்த்திக்கடனைத் தொடங்கியுள்ளனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks