வெறும் சைகை மட்டும் காட்டினால் விலைவாசி உயர்வு குறைந்து விடுமா ? - RB உதயகுமார் கேள்வி!

வெறும் சைகை மட்டும் காட்டினால் விலைவாசி உயர்வு குறைந்து விடுமா ? - RB உதயகுமார் கேள்வி!
News Image

ஒரே மாதத்தில் 10 குழந்தைகள் மாயம் ஆட்சி அரியணையில் அமர்த்திய குட்டி நண்பா,நண்பீஸ்களுக்கு நீங்கள்  இப்படி விசுவாசத்தைக் காட்டுகிறீர்களே.

முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், வெளியிட்டுள்ள வீடியோவில்

தற்போது இடைத்தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகளுக்கு மட்டும் முதல்வர் முகாமிட்டிருக்கிறார். ஆனால் தமிழ்நாட்டில் தவெக அரசு கடந்த 6 மாத காலங்கள் பதவியேற்று, இன்றைக்கு அரிசி, மளிகைச் சாமான்கள், காய்கறிகள் விலைகள் தாறுமாறாக உயர்ந்திருப்பது குறித்து அக்கறை செலுத்தினாரா என்பது தமிழ்நாட்டு மக்களுக்கே வெளிச்சம்? கடந்த மாதம் 126 ரூபாய்க்கு விற்ற துவரம்பருப்பு இன்றைக்கு 143 ரூபாய், 120 ரூபாய்க்கு விற்ற உளுந்தம்பருப்பு 128 ரூபாய்,105 ரூபாய்க்கு விற்ற பாசிப்பருப்பு 112 ரூபாய்,80 ரூபாய்க்கு விற்ற கடலைப்பருப்பு 90 ரூபாய், 330 ரூபாய்க்கு விற்ற குண்டு மிளகாய் ரூபாய் 420 ரூபாய்,அரிசி விலை ஒரு சிற்பம் என்ன விலைக்கு விற்பது என்பது நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை. வெங்காய விலையைச் சலுகை விலையில் கொடுக்கிறோம் என்று டெண்டர் கொடுத்து, அந்த டெண்டர் வந்ததற்குப் பிறகு அந்த வெங்காயத்தை எடுக்காமல் அது அழுகிப் போய், எங்கே போனது வெங்காயம் என்று தேடுகிற ஒரு நிலைமையிலே விலையும் உச்சத்திலே போய்விட்டது. வாங்கிய வெங்காயத்தையும் காணவில்லை. இது குறித்து எல்லாம் ஆய்வு நடத்தி, தீர்வு காண அக்கறை செலுத்தாத முதல்வர் விஜய் இடைத்தேர்தலில் தவெக சட்டமன்ற உறுப்பினரின் எண்ணிக்கையை உயர்த்துவதில் மட்டும் அவர் எப்படி தனி அக்கறை செலுத்துகிறார் என்பதை நான் காழ்புணர்ச்சியோடு சொல்லவில்லை.

ஏமாற்றத்தோடு திரும்பிச் செல்வதுதான் தலைமைச் செயலகத்தின் வாடிக்கை

ஒரு தூய ஆட்சி தருகிறேன் என்று சொன்னவர், எப்படி ஒரு தூய எண்ணத்தோடு இடைத்தேர்தல் நடைபெறுகிற விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் தொகுதிகளுக்கு முகாமிட்டு எவ்வளவு அக்கறை செலுத்துகிறார் என்பதைப் பாருங்கள். நீங்கள் வாக்களித்ததற்கு பின்பு உங்களை மறந்துவிடுவார். இந்த விலைவாசி உயர்வை ஆதரிக்கின்ற வகையில் அரசே ஆவின் நெய் முதலான இனிப்புப் பொருட்களின் விலையையும் இந்தத் தவெக அரசு சத்தமில்லாமல் உயர்த்தியிருக்கிறது. சின்ன வெங்காயம் 83 ரூபாயிலிருந்து 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது, பீன்ஸ் 90 முதல் 100 வரையிலும் விற்கப்படுகிறது. தமிழக முதல்வரும், இதர அமைச்சர்களும் இந்த விலைவாசி உயர்வு பற்றி எந்தக் கவலையும் அடைந்ததாக நமக்குத் தெரியவில்லை. மௌனமாக காலத்தைக் கடந்து சென்று கொண்டிருக்கிறார்கள். இது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கோ அல்லது அமைச்சர்கள் கவனத்திற்கோ  நேரில் சென்று கோரிக்கை மனுவாகக் கொடுக்கலாம் என்று தலைமைச் செயலகத்தில்  மக்கள் சொல்லும் போது, அமைச்சர்கள் தங்கள் அலுவலக அறைகளுக்கு வந்து அரசுப் பணிகளை கவனிப்பதே குதிரைக் கொம்பாக இருக்கிறது என்று மக்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். கோரிக்கை மனுக்களோடு அமைச்சர்களைச் சந்திக்க வரும் பார்வையாளர்கள் பல மணி நேரம் காத்திருந்துவிட்டு, ஏமாற்றத்தோடு திரும்பிச் செல்வதுதான் தலைமைச் செயலகத்தின் வாடிக்கையான காட்சியாக இருக்கிறது.

சைகை போதுமா?

இந்த மக்களுக்கு இன்றைக்கு நீங்கள் வெறும் சைகையை மட்டும் இன்றைக்கு பரிசாகத் தருகிறீர்களே, அவர்கள் சைகையை வைத்து விலைவாசியை குறைக்க முடியுமா? சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முடியுமா? உங்கள் சைகையை வைத்துக்கொண்டு அவர்கள் வாழ்ந்து விடத்தான் முடியுமா? கல்வி கற்றுவிட முடியுமா? வேலைவாய்ப்பு பெற்றுவிட முடியுமா? முதல்வரே, நீங்கள் மிகப்பெரிய சிந்தனைவாதி என்று நாட்டு மக்கள் நம்புகிறார்கள். நீங்கள் பெரிய அறிவாற்றல் உள்ளவர் என்று நாட்டு மக்கள் நம்புகிறார்கள். நம் வாழ்க்கையிலே மாற்றத்தை ஏற்படுத்தி விடுவார் என்று நம்பித்தான் உங்களை அரியணையில் அமர்த்தி இருக்கிறார்கள். ஆனால் நீங்கள் எதுவுமே பேசாமல் மௌன சாமியாராக கடந்து செல்கிறீர்களே, இது நியாயமா என்பதுதான் இப்போது குட்டி நண்பா, நண்பீஸ் மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks