புதுச்சேரியில் மொத்தம் 2.54 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. அதில், சிவப்பு ரேஷன் கார்டு மற்றும் மஞ்சள் ரேஷன் கார்டு வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் இலவச அரிசிக்குப் பதிலாக, ரொக்கமாக நேரடி பயனாளர் பணப் பரிமாற்றத் திட்டத்தின் (Direct Benefit Transfer – DBT) கீழ், தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

ரேஷன் அட்டை

அதன்படி, முதல்வர் ரங்கசாமி உத்தரவின்படியும், குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் சிவக்கொழுந்து வழிகாட்டுதல் மற்றும் தொடர் கண்காணிப்பின்படியும், இத்திட்டத்தின் கீழ் மார்ச் 2026 முதல் ஆகஸ்ட் 2026 வரையிலான ஆறு மாதங்களுக்கான ரொக்க உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் BPL AAY/PHH சிவப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 கிலோ அரிசிக்கு பதிலாக மாதம் ரூ.860, APL Non-PHH மஞ்சள் குடும்ப அட்டைதாரர்களுக்கு 10 கிலோ அரிசிக்குப் பதிலாக மாதம் ரூ.430-ம் ரொக்க உதவித்தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி மார்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான 6 மாத தொகையாக ரூ.122.93 கோடியை பயனாளர் வங்கி கணக்குகளில் அம்மாநில அரசு செலுத்தியுள்ளது.

வங்கி கணக்கில் வரவு

இதுதொடர்பாக புதுச்சேரி அரசு குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முதல்வர் ரங்கசாமி உத்தரவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சிவக்கொழுந்து வழிகாட்டுதலின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி பி.பி.எல்., ஏ.ஏ.ஒய்., மற்றும் பி.ஹெச்.ஹெச் உள்ளிட்ட சிவப்பு ரேஷன் கார்டு தாரர்களுக்கு 20 கிலோ அரிசிக்குப் பதிலாக மாதந்தோறும் ரூ.860ம், மஞ்சள் ரேஷன் கார்டுதாரர்களுக்கு 10 கிலோ அரிசிக்குப் பதிலாக மாதந்தோறும் ரூ.430-ம் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. எனவே, கடந்த மார்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான 6 மாத காலத்திற்கு மொத்தம் ரூ.122.91 கோடி ரொக்கமாக தகுதியுள்ள ரேஷன் கார்டுதாரர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article