ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகள் முலம் மாநில நிலையில் பொருள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் 35,083 ரேஷன் கடைகளும், 2 கோடியே 25 லட்சத்தி 24 ஆயிரத்து 784 குடும்ப அட்டைகள் உள்ளன. இதன் மூலம் 7 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் அரிசி, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட மானிய விலையில் உணவு பொருட்களை வாங்கி பயனடைந்து வருகின்றனர்.

ரேஷன் கார்டு

குறிப்பாக எது இருக்கோ இல்லையோ அரசின் எந்த ஒரு திட்டங்களுக்கும் ரேஷன் கார்டுகள் ரொம்ப முக்கியம். இந்நிலையில் ரேஷன் கார்டில் உள்ள நபர்களின் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி திருத்தம் உள்ளிட்ட குறைபாடுகளை சரி செய்ய முடியால் பொதுமக்கள் அலைக்கழிக்கப்பட்டு வந்தனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழக அரசு ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில் நடத்தும் "பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் முகாம்" நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரேஷன் அட்டையில் உடனடியாக திருத்தம் செய்யும் வகையில் சிறப்பு முகாம் நடைபெறுவது தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரேஷன் கார்டு திருத்தம்

அதன்படி பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் பிரதி மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி நவம்பர் 2026 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் 14.11.2026 சனிக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளன.

புகார் தெரிவிக்கலாம்

குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் இம்முகாமில் மேற்கொள்ளப்படும். மேலும், நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்றும் வழங்கப்படும். பொது விநியோக நியாய விலைக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால், குறைகளுக்கு விரைந்து தீர்வுகான செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சென்னையில் 19 மண்டலங்களில்

இச்சேவைகள் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்களில் பெறப்படும் கடவுச்சொல் வழியாக (OTP) மட்டுமே மேற்கொள்ளப்படும் என்பதால் குடும்ப அட்டைத்தாரர்கள் பதிவு செய்யப்பட்ட கைபேசியுடன் மண்டல அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும். சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இச்சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article