சென்னை OMR, GNT சாலை முதல்.. ரூ.6,513 கோடியில் மெகா திட்டம்.. உங்கள் ஊர் லிஸ்டில் இருக்கா?

சென்னை OMR, GNT சாலை முதல்.. ரூ.6,513 கோடியில் மெகா திட்டம்.. உங்கள் ஊர் லிஸ்டில் இருக்கா?
News Image

விரிவான சாலை கட்டமைப்பு மேம்பாடு திட்டத்துக்காக ரூ.6,513.18 கோடி மதிப்பில் 2,221 சாலைப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தத் திட்டமிடல் பணிகள் மொத்தம் 4,126.39 கி.மீ. நீளத்திற்குச் செயல்படுத்தப்பட உள்ள சூழலில், இதற்கான மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

1. புறவழிச்சாலைகள் மற்றும் சுற்றுச்சாலைகள் (ரூ.283.05 கோடி)

* சிவகாசி நகரத்திற்கு வெளிவட்டச் சாலை (6.2 கி.மீ) – ரூ.134.58 கோடி.

* பள்ளிகொண்டா நகரத்திற்குப் புறவழிச்சாலை (2.26 கி.மீ) – ரூ.60.97 கோடி.

* மன்னார்குடி நகரத்திற்குச் சுற்றுச்சாலை (3.74 கி.மீ) – ரூ.46.00 கோடி.

* மயிலாடுதுறை புறவழிச்சாலைக்கான இணைப்புச் சாலை (1.01 கி.மீ) – ரூ.25.00 கோடி.

* உளுந்தூர்பேட்டை நகரத்திற்குப் புறவழிச்சாலை (2.11 கி.மீ) – ரூ.16.50 கோடி.

2. நான்கு வழி மற்றும் ஆறு வழித்தடமாக அகலப்படுத்துதல்

* மணப்பாறை – துவரங்குறிச்சி சாலை (SH 71A), 10 கி.மீ தூரத்திற்கு நான்கு வழிச்சாலையாக மாற்றுதல் – ரூ.95.00 கோடி.

* ஒகேனக்கல் – பென்னாகரம் – தருமபுரி – திருப்பத்தூர் சாலையில் (தருமபுரி மற்றும் திருப்பத்தூர் பகுதிகளில்) 12.15 கி.மீ தூரத்திற்கு நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்துதல் – ரூ.105.00 கோடி.

* தண்டலம் – பேரம்பாக்கம் – தக்கோலம் – அரிகலபாடி சாலை (SH 50B), 5.5 கி.மீ – ரூ.48.50 கோடி.

* பல்லடம் – அவிநாசி – புளியம்பட்டி சாலை, 6 கி.மீ – ரூ.45.25 கோடி.

* முசிறி – குளித்தலை – புதுக்கோட்டை – ஆலங்குடி – பேராவூரணி – சேதுபாவாசத்திரம் சாலையில் ஆலங்குடி அருகே 7.44 கி.மீ – ரூ.43.00 கோடி.

* ஆற்காடு – விழுப்புரம் சாலை (SH 4), 5.4 கி.மீ – ரூ.40.55 கோடி.

* திருப்போரூர் அருகே ராஜீவ் காந்தி சாலையை (OMR) நான்கு வழித்தடத்திலிருந்து ஆறு வழித்தடமாக அகலப்படுத்துதல் (2.6 கி.மீ) – ரூ.37.68 கோடி.

3. உயர்மட்டப் பாலங்கள் (Bridges)

* திருத்தணி நகரி – பள்ளிப்பட்டு சாலையில் (கி.மீ 1/8) நெடியம் காலனிக்குச் செல்லும் வழியில் தரைப்பாலத்திற்குப் பதிலாக உயர்மட்டப் பாலம் அமைத்தல் – ரூ.35.00 கோடி.

* அந்தியூர் கரட்டடிபாளையம் – பங்களாபுதூர் சாலையில் பவானி ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம் அமைத்தல் – ரூ.25.00 கோடி.

* முதுகுளத்தூர் கீழக்கிடாரம் – வாலிநோக்கம் சாலையில் உயர்மட்டப் பாலம் அமைத்தல் – ரூ.6.65 கோடி.

4. நகர்ப்புற மேம்பாட்டுப் பணிகள் (Urban Improvements)

* மதுரை மாநகரில் வாரணாசி – கன்னியாகுமரி சாலையை முழுமையாக அகலப்படுத்துதல் – ரூ.25.30 கோடி.

* சென்னையில் கிராண்ட் நார்தர்ன் டிரங்க் (GNT) சாலையை மேம்படுத்துதல் – ரூ.19.80 கோடி.

* ஸ்ரீபெரும்புதூர் நகருக்குள் சென்னை – சித்தூர் – பெங்களூரு சாலையை அகலப்படுத்துதல் – ரூ.10.50 கோடி.

இந்தப் பணிகளின் மூலம் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகள் அகலப்படுத்தப்படுவதுடன், புறவழிச்சாலைகள் மற்றும் சுற்றுச்சாலைகள் வழியாக நகரங்களில் போக்குவரத்து நெரிசல் குறையும். இப்பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளி (Tender) நடைமுறைகளை விரைந்து முடித்து, குறிப்பிட்ட காலத்திற்குள் தரமான முறையில் பணிகளைச் செய்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks