Olympic City: அட்ரா சக்க..! 5 மாவட்டங்களுக்கு ஜாக்பாட், சென்னையில் பிரமாண்ட ஒலிம்பிக் சிட்டி - டெண்டர் விட்ட தமிழ்நாடு அரசு

Olympic City: அட்ரா சக்க..! 5 மாவட்டங்களுக்கு ஜாக்பாட், சென்னையில் பிரமாண்ட ஒலிம்பிக் சிட்டி - டெண்டர் விட்ட தமிழ்நாடு அரசு
News Image

TN Govt Olympic Centers: சென்னை செம்மஞ்சேரியில் 124.31 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட  ஒலிம்பிக் நகரம் அமைக்கப்பட உள்ளது.

ஒலிம்பிக் நகரம், மையங்கள் - டெண்டர் வெளியீடு:

தமிழ்நாட்டில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதோடு, மாநிலத்தை நாட்டின் விளையாட்டு தலைநகரமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் முதல் சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவித்து இருந்தார். அதோடு, மாநிலம் முழுவதும் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் கூறி, அதற்காக நடப்பாண்டில் 50 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டு இருந்தது. அந்த திட்டங்களை செயல்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு தற்போது பொதுப்பணித்துறை வாயிலாக டெண்டர் வெளியிட்டுள்ளது. அதன்படி, செம்மஞ்சேரியில் பிரமாண்ட ஒலிம்பிக் நகரம் 124 ஏக்கரில் அமைய உள்ளது. இதுபோக  திருவண்ணாலை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஒலிம்பிக் போட்டிகளுக்கு வீரர்களை தயார்படுத்தும் வகையில், விளையாட்டு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

செம்மஞ்சேரியில் பிரமாண்ட ஒலிம்பிக் நகரம்:

சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் வெளியிட்ட அறிவிப்பின்படி, செம்மஞ்சேரியில் பிரமாண்ட ஒலிம்பிக் நகரம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக இந்திய கட்டிடக்கலை கவுன்சிலில் பதிவு செய்த முன்னணி நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்று டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.  அதாவது, முதலில் சிறந்த நிறுவனத்தை தேர்வு செய்து, அவர்கள் தான் முழு மாஸ்டர் ப்ளான், விரிவான வரைகலை திட்டத்தை தயார் செய்வார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகளை ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல வைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த நகரம் ஏற்படுத்தப்படுகிறது. இதில்

உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு அரங்குகள்

அதிக செயல்திறன் நிறைந்த பயிற்சி மையங்கள்

விளையாட்டு அறிவியல் & விளையாட்டு மருத்துவ மையங்கள்

வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு தங்கும் வசதி

தேசிய, சர்வதேச போட்டிகளை நடத்தும் வசதி ஆகியவை இடம்பெற உள்ளது

இதையும் படியுங்கள்: Chennai Airport: நாங்க ரெடி, நீங்க எப்போ வருவீங்க? சென்னை புதிய விமான நிலையம் - ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆய்வு?

5 மாவட்டங்களில் ஒலிம்பிக் மையங்கள்:

கிராமப்புற அளவிலிருந்து திறமையாளர்களை கண்டறிந்து ஒலிம்பிக் போட்டிக்கு தயார்படுத்தும் வகையில், மாநிலத்தின் 5 மாவட்டங்களில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. அதன்படி,

சென்னை - 15.00 ஏக்கர்

திருவண்ணாமலை - 10.00 ஏக்கர்

கோயம்புத்தூர் - 20.00 ஏக்கர்

நாகப்பட்டினம் - 12.00 ஏக்கர்

பரமக்குடி (ராமநாதபுரம்) - 7.50 ஏக்கர்

பரப்பளவில் இந்த விளையாட்டு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான  விரிவான திட்ட அறிக்கைகளை தயார்படுத்துவதற்கான நிறுவனங்களை தேர்வு செய்வதற்கான டெண்டரும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ரிசர்ச் பிரிவு மூலம் 8 வயது முதல் 18 வயது வரை உள்ள திறமையான குழந்தைகளை அடையாளம் கண்டு, இந்த மையங்களில் பயிற்சி கொடுக்க அரசு திட்டமிட்டுள்ளது. சென்னையில் மட்டும் இல்லாமல், கோவை, திருவண்ணாமலை, நாகை, பரமக்குடி என பரவலாக மையங்கள் அமைப்பதன் மூலம், கிராமப்புற வீரர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

விளையாட்டுத்துறையை ஊக்குவிக்க தீவிரம்:

இதுபோக மாநிலத்தின் 38 மாவட்டங்களிலும் விளையாட்டு விடுதிகள், 500 மைதானங்களை மேம்படுத்துவது தொடர்பான திட்டங்களையும் அரசு கையிலெடுத்துள்ளது.  மாநில அரசின் இந்த முன்னெடுப்புகளால்

வெளிநாடு போகாமலேயே, தமிழ்நாட்டிலேயே வீரர்களுக்கு சர்வதேச தரத்திலான பயிற்சி, மருத்துவம், உணவு, தங்குமிடம் கிடைக்கும்

பயிற்சியாளர், விளையாட்டு மருத்துவம், விளையாட்டு அறிவியல், மேலாண்மை என ஆயிரக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும்

செம்மஞ்சேரி, OMR பகுதிக்கு: பெரிய விளையாட்டு நகரம் வருவதால், சாலை, போக்குவரத்து, வணிகம், ரியல் எஸ்டேட், சுற்றுலா அனைத்தும் வளரும்

சர்வதேச போட்டிகளை நடத்தும் போது, தமிழ்நாடு உலக வரைபடத்தில் இடம் பிடிக்கும். விளையாட்டு சுற்றுலா மூலம் வருமானம் பெருகும்

சென்னையை மட்டும் நம்பாமல் தென்கோடி மாவட்டங்களிலும் விளையாட்டு வசதி வருவதால், அந்த பகுதி பிள்ளைகளும் சர்வதேச அளவில் விளையாட்டில் சாதிக்கலாம்

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks