சீன உளவாளி எனக்கூறப்படும் பெண்ணுடன் தொடர்பில் இருந்த புகாரில் என்விடியா (Nvidia) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியிலிருந்து ஜென்சன் ஹுவாங் விலகியுள்ளார்.

உளவாளியாக செயல்பட்ட சீனப்பெண்?

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சாண்டா கிளாராவை தலைமையிடமாகக் கொண்டு செயற்கை நுண்ணறிவு (AI) உள்கட்டமைப்பு மற்றும் செமிகண்டக்டர் வடிவமைப்பு நிறுவனமான என்விடியா செயல்பட்டு வருகிறது. அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் வெளியிட்ட தகவலின்படி, ஜென்சென் ஹுவாங் சீனப் பெண் ஒருவருடன் நெருக்கமாக இருந்ததாகக் கூறப்பட்டது. அலிஸ் ஹுவாங் என்றப்பெண் சீன அரசுக்காக தகவல்களைத் திரட்டியதாகவும், அவரது வற்புறுத்தல் காரணமாக சீன நிறுவனங்களுக்கு சிப்கள் அனுப்பப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

CEO-பதவியிலிருந்து ராஜினாமா!

இவ்விவகாரம் உலகளவில் பூதாகரமான நிலையில் என்விடியா நிறுவனத்தின் பங்குகள் பெருமளவில் சரியத்தொடங்கின.மேலும், அந்நிறுவனத்தில் பணிப்புரியும் மற்றொரு பெண்ணுடனும் ஹுவாங் உறவில் இருந்ததாகச் செய்திகள் பரவியது. இந்நிலையில் இவ்விவகாரங்கள் அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக் கருதப்பட்ட நிலையில், என்விடியா நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவும் ஜென்சன் ஹுவாங் மீதான விசாரணையை தீவிரப்படுத்தியது. இதனையடுத்து சீனப்பெண்ணுடன் உறவில் இருந்ததை ஜென்சன் ஹுவாங் ஒப்புக்கொண்டு மன்னிப்பு கோரியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் என்விடியா (Nvidia) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியிலிருந்து ஜென்சன் ஹுவாங் விலகியுள்ளார். இதனைத்தொடர்ந்து நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக இருந்த கோலெட் கிரெஸ் இடைக்கால சிஇஓ-வாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Source: Read Full Article