Nvidia CEO: 30 நிமிடங்களில் ரூ.70 ஆயிரம் கோடி ஸ்வாஹா..! உளவாளியுடன் காதல், அமெரிக்க தொழிலதிபர் கலக்கம்

Nvidia CEO: 30 நிமிடங்களில் ரூ.70 ஆயிரம் கோடி ஸ்வாஹா..! உளவாளியுடன் காதல், அமெரிக்க தொழிலதிபர் கலக்கம்
News Image

Nvidia CEO Jensen Huang NetWorth: ஃபோர்ப்ஸ் உலக பணக்காரர்கள் பட்டியலில் இரண்டு இடங்கள் பின்தங்கி,ஜென்சன் ஹுவாங் 10வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

30 நிமிடங்களில் ரூ.70 ஆயிரம் கோடி காலி..!

அமெரிக்காவின் செமிகண்டக்டர் நிறுவனமான Nvidia-வின் தலைமை செயல் அதிகாரியான ஜென்சன் ஹுவாங், சீன பெண் உளவாளியுடன் காதல் உறவில் இருந்தது அம்பலமாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரிடம் தொழில்நுட்ப ரீதியான தகவல்களை பகிர்ந்துகொண்டதாக ஜென்சன் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். இதுதொடர்பான விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளதால், Nvidia நிறுவன பங்குகளின் மதிப்பு திங்கட்கிழமை அன்று கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால் அவரது சொத்து மதிப்பு 30 நிமிடங்களில் சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் சரிவை சந்தித்துள்ளது. அதோடு, ஃபோர்ப்ஸின் உலக பணக்காரர்கள் பட்டியலில் 2 இடங்கள் பின் தங்கி 10வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

ஜென்சன் ஹுவாங்கின் சொத்து மதிப்பு..!

சர்ச்சைக்கு முன்பாக ஜென்சன் ஹுவாங்கின் சொத்து மதிப்பு 162.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது 15 லட்சம் கோடி ரூபாயாக இருந்துள்ளது. வர்த்தகம் தொடங்கிய சுமார் 30 நிமிடங்களிலேயே அவரது நிகர சொத்து மதிப்பு 154.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாக சரிந்தது.  Nvidia நிறுவன பங்குகளின் மதிப்பு 7 சதவ்இகிதத்திற்கும் அதிகமான சரிவை கண்டதால், ஒருகட்டத்தில் உலக பணக்காரர்களுக்கான முதல் 10 இடங்களில் இருந்தே ஜென்சன் வெளியேற்றப்பட்டு பின்பு மீண்டும் பட்டியலுக்குள் நுழைந்தார். இவரது சொத்து மதிப்பு பெரும்பாலான பகுதி, இவர் வசமுள்ள Nvidia நிறுவனத்தின் பங்குகளின் அடிப்படையிலானது என்பது குறிப்பிடத்தக்கது.

Nvidia நிறுவனத்திற்கும் சரிவு..!

உலகின் மிகவும் மதிப்புமிக்க பொதுப் பங்கு நிறுவனம் என்ற இடத்திற்காக ஆப்பிள் நிறுவனத்துடன் Nvidia போட்டியிட்டு வருகிறது. இந்நிலையில் ஏற்பட்டு நிறுவன பங்கு மதிப்பு சரிவால், அதன் சந்தை மூலதனம் 4.5 டிரில்லியன் டாலரிலிருந்து குறைந்துள்ளது. இதுதொடர்பான விளக்க அறிக்கையில் தனக்கு ஒரு தகாத உறவு இருந்ததை ஜென்சன் ஒப்புக்கொண்டு, தனது செயல்களுக்காக மன்னிப்புக் கோரியதோடு, நிறுவனத்தின் விசாரணைக்குத் தனது ஆதரவையும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான விசாரணைக்காக நிறுவனம் சிறப்பு குழு ஒன்றையும் நியமித்துள்ளது.

இதையும் படியுங்கள்: Renault SUV: 5 ஸ்டார் காருக்கு ரூ.2.10 லட்சம் அதிரடி தள்ளுபடி..! 4.99% வட்டியில் EMI - 19KM மைலேஜ் SUV-யின் விவரங்கள்

யார் அந்த அலிஸ் ஜுவாங்?

தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின்படி, சீனாவின் அரசுப் பாதுகாப்பு அமைச்சகத்திற்காக ஜென்சன் ஹுவாங் பற்றிய தகவல்களைச் சேகரிப்பதற்காக, பெய்ஜிங்கின் உயர்மட்ட உளவு நிறுவனத்தால் aலிஸ் ஹுவாங் நியமிக்கப்பட்டுள்ளார்.  இதையடுத்து இருவரும் எப்போது முதன்முதலில் சந்தித்தார்கள் என்ற தெளிவான விவரங்கள் இல்லாவிட்டாலும்,  ஜூன் 2024-ல் ஒரு மதுபான விடுதியில் ஜென்சன் மற்றும் அலிஸ் ஜோடியாக ஒரு புகைப்படத்தில் சிக்கியுள்ளனர். சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட நியோகிளவுட் மற்றும் ஏஐ கம்ப்யூட்டிங் சேவைகள் வழங்கும் நிறுவனமான மெகாஸ்பீடின் தலைமை நிர்வாகி என்று அலிஸ் தனது விவரங்களை பகிர்ந்துள்ளார். ஆனால், முதல் எட்டு மாதங்களிலேயே அந்நிறுவனம்  நிர்வாக இயக்குநர் பதவியிலிருந்து அலிஸை நீக்கிவிட்டதாக கூறப்படுகிறது.

என்விடியா சூப்பர்கம்ப்யூட்டர்களை ஒருங்கிணைக்கும் நிறுவனமான ஜிகாபைட்டின் நிர்வாகிகள் உட்பட, செயற்கை நுண்ணறிவு சிப் துறையின் மற்ற தலைவர்களுடனும் அலிஸிற்கு தொடர்புகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. சீன கேமிங் மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் நிறுவனமான 7ரோட், தனது வெளிநாட்டுச் செயல்பாடுகளை சிங்கப்பூரிலிருந்து பிரித்த பிறகு, 2023-ல் மெகாஸ்பீட் நிறுவப்பட்டது. இந்நிறுவனம் என்விடியாவுடன் கூட்டு சேர்ந்து, ஆசிய-பசிபிக் பிராந்தியம் முழுவதும் தனது தொழில்நுட்பத்தை வழங்குகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks