தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட நிஷாந்தின் தந்தை சுரேஷ் மற்றும் நிஷாந்தின் காதலி மீனாட்சி ஆகிய இருவரையும் வரும் 29 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க JM3 நீதிபதி சங்கீதா உத்தரவு.

தடயவியல் நிபுணர்கள் மூலமாக தடயங்களை சேகரிக்கரிப்பு

மதுரை பைபாஸ் சாலை நேரு நகர் நேதாஜி மெயின் ரோடு பகுதியில் தனிஷ்க் ஜுவல்லரி கடந்த மாதம் 15 ஆம் தேதி திறக்கப்பட்டடு விற்பனை நடைபெற்று வந்தன. இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி கடையை ஊழியர்கள் திறந்த போது கடைக்குள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நகைகள் சிதறிய நிலையில் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக மேலாளருக்கு தகவல் அளித்த பின்னர் காவல் துறையினருக்கு புகார் அளித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த எஸ் எஸ் காலனி காவல்துறையினர் கொள்ளை நடைபெற்ற பகுதியில் தடயவியல் நிபுணர்கள் மூலமாக தடயங்களை சேகரிக்க தொடங்கினர்.

கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது உறுதி

பின்னர் கடைக்குள் இருந்த சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்தபோது 1 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரைக்குமான பதிவுகளை பார்த்தபோது சிசிடிவி கேமராவில் கையில் கட்டு போட்டபடி இளைஞர் 1ஆம் தேதியும், 2 ஆம் தேதி தொப்பி அணிந்தவாறு இயல்பாக வந்த இளைஞரையும் ஒப்பிட்டு பார்த்துள்ளனர். அந்த காட்சிகளோடு 12 ஆம் தேதி முகமுடியுடன் கொள்ளையில் ஈடுபட்ட நபரின் அடையாளங்களை ஒப்பிட்டபோது இரு வீடியோவிலும் கையில் டாட்டூ இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் நகைக்கடையை ஒட்டிய நேதாஜி மெயின் ரோடு பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் பதிவுகளை பார்த்தபோது இளைஞர் ஒருவர் முகமூடி மற்றும் ஹெல்மெட் அணிந்தவாறு கையுறை ஆகியவற்றை அணிந்து பைக்கில் அதிவேகமாக பேக்குடன் சென்றது தெரியவந்துள்ளது. அதனடிப்படையில் மதுரை பழங்காநத்தம் அருட்பெருஞ்ஜோதி தெரு பகுதியைச் சேர்ந்த நிஷாந்த் என்ற இளைஞர் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது உறுதியானது.

அவசரகால வழியில் இருந்த இரும்பு வேலியை அகற்றிவிட்டு அதற்குள் உள்ளே புகுந்து சென்று பார்த்துள்ளார்.

பின்னர் நிஷாந்த் குறித்த விசாரணையில் ஈடுபட்டபோது கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திய இளைஞரான நிஷாந்த் youtube சேனல்களுக்கும் வீடியோ எடிட்டிங் பணியை அவ்வப்போது செய்து வந்துள்ளார். மேலும், கேரளா, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குத் தனது நண்பர்களோடு சேர்ந்து ஜாலி ரெய்டு போவது சுற்றுலா தளங்களுக்கு சுற்றி திரிவதும் என ஆடம்பரமாக வாழ்ந்து வந்துள்ளார். அப்போது தனது கல்லூரி கால தோழியும் பிரபல இன்ஸ்டா இன்புளூயன்சருமான மீனாட்சியையும் காதலித்துள்ளார். தற்போது மீனாட்சி புதிய வீடு கட்டிவரும் நிலையில் மீனாட்சிக்கு அதிகளவிற்கு பணம் தேவைப்படுவதாகும் பல்வேறு கடன்கள் இருப்பதாகவும் காதலன் நிஷாந்திடம் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இதனால் கலங்கிய நிஷாந்த் ஹாலிவுட் பட Money Heist பட ஸ்டைலில் நகைக்கடையில் கொள்ளையடிப்பதற்கான திட்டம் குறித்து தெரிவித்துள்ளார். இதையடுத்து இருவரும் திட்டம் தீட்டியபடி தனிஷ்க் நகைக்கடையில் கொள்ளையடிப்பதற்காக திட்டமிட்டு கடந்த 5 ஆம் தேதியன்று நிஷாந்த் தனிஷ்க் ஜுவல்லரி நகைக்கடையில் மேலே அமைக்கப்பட்ட இரும்பு சாரத்தின் மூலமாக சென்று அங்கு லிப்டின் அருகே அமைக்கப்பட்டு இருக்கக்கூடிய அவசரகால வழியில் இருந்த இரும்பு வேலியை அகற்றிவிட்டு அதற்குள் உள்ளே புகுந்து சென்று பார்த்துள்ளார்.

லிப்ட் ஷட்டரை உள்புறத்தில் இருந்து வெளியில் திறந்துள்ளார்.

அப்போது கடைக்குள் புகுந்து செல்வதற்கான அதற்கு தேவையான டூல்ஸ்களை எடுத்து பின்னர் டூல்ஸ்களுடன் 12ஆம் தேதி நள்ளிரவு இரும்பு சாரம் வழியாக மூன்றாவது தள மாடிக்கு சென்ற நிஷாந்த் லிப்ட் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் லிப்ஸ்டிக் ரோபின் மூலமாக இறங்கி லிப்ட் ஷட்டரை உள்புறத்தில் இருந்து வெளியில் திறந்துள்ளார். பின்னர் ஷட்டரை மீண்டும் திறக்க முடியாமல் போய்விடும் என்பதால் ஷட்டரின் நடுவில் கம்பியை வைத்துவிட்டு மெதுவாக ஒவ்வொரு தளமாக இறங்கிச் சென்று பின் படிக்கட்டு வழியாக தரைத்தளத்தில் உள்ள நகை கடைக்குள் இறங்கியுள்ளான். இதை தொடர்ந்து கடைக்குள் விற்பனையாக வைக்கப்பட்டிருந்த நகைகளை ஒவ்வொன்றாக எந்தவித பதற்றமும் இன்றி எடுத்து பேக் ஒன்றில் பத்திரமாக வைத்துள்ளார். பின்னர் அதனை தோளில் போட்டு சென்று மீண்டும் லிப்டில் உள்ள ஷட்டரின் உள்ள கம்பியை எடுத்துவிட்டு அதே லிப்டின் மூலமாக ஒவ்வொரு தளமாக கயிறு மூலமாக சென்று அங்கிருந்து சாரம் வழியாக இறங்கியுள்ளான். முன்னதாக நிசாந்த நகைக்கடைக்கு பின்புற பகுதிக்கு நள்ளிரவு 1மணியளவிற்கு வந்த போது அங்குள்ள நாய்கள் நிஷாந்தை துரத்திய நிலையில் முதற்கட்ட முயற்சியை விட்டுவிட்டு மீண்டும் அந்த பகுதியை சுற்றி வந்து பைக்கை நிறுத்திவிட்டு மேலே சென்று கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. கொள்ளையடிப்பதற்காக தனது காதலி கொடுத்த பைக்கை பயன்படுத்தி கொள்ளையடித்த பேக்குடன் நேரு நகர், மாடக்குளம், பழங்காநத்தம் திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளில் சுற்றி சுற்றிவந்துள்ளான். இதையடுத்து அதிகாலை தனது தந்தை சுரேஷிடம் தொடர்பு கொண்டு தன்னிடம் ஒரு பேக் இருப்பதாக கூறி வீட்டில் வைக்குமாறு கூறியுள்ளார். அதனை சுரேஷ் வாங்கி வீட்டில் வைத்த பின்னர் வீட்டிற்கு சென்ற நிஷாந்த் மீண்டும் பேக்கை எடுத்து பல்வேறு பகுதிகளிலும் பதுக்கி வைத்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.

மீனாட்சியின் பைக்

இதனிடையே மாடக்குளத்தில் நிஷாந்த் குடும்பத்திற்கு சொந்தமான வயல்வெளிக்கு ஆட்டோவை எடுத்துச் சென்ற நிஷாந்த் தான் நகை கடைக்கு சென்றபோது வேவு பார்த்த உடைகள் மற்றும் கொள்ளையடித்த போது பயன்படுத்திய உடைகள் என அனைத்தையும் தீயில் இட்டு கொளுத்தி விட்டு அந்தப் பகுதியில் நகைகளை பதுக்கி வைத்து விட்டு மீண்டும் ஆட்டோ மூலமாக சென்றுள்ளான். பின்னர் அங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு தப்பியுள்ளார் இது சிசிடிவி கேமராக்கள் மூலமாக விசாரணையில் தெரிய வந்த நிலையில் நிஷாந்தின் வீட்டிற்கு நேற்று மாலை சென்று காவல்துறையினர் நிஷாந்தின் தந்தை சுரேஷிடம் பல மணி நேரமாக விசாரணை நடத்தினர். பின்னர் பைக் யாருடையது என்ற அடிப்படையில் பார்த்தபோது திருப்பாலை பகுதியில் உள்ள நிஷாந்தின் காதலியான மீனாட்சியின் பைக்கை கொள்ளை அடித்த நகைகளை எடுத்துச் செல்வதற்கு பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது.

காவல்துறையினர் கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து மூன்று நாட்களாக நிஷாந்தை காவல்துறையினர் தேடி வரும் நிலையில் பல்வேறு இடங்களில் செல்போன் நெட்வொர்க் மூலமாக காவல்துறையினர் பிடிக்க முயன்ற போதும். அவ்வப்போது செல்போனைஅனைத்து தப்பியோடியுள்ளான். பின்னர் செல்போன் மூலமாக காதலி மீனாட்சியை தொடர்புகொண்டு பேச முயன்ற போது மீனாட்சி எங்கெல்லாம் நகைகளை பதுக்கி வைத்திருந்தார் என்பது குறித்தான தகவல் காவல்துறையினருக்கு கிடைத்துள்ளது. பின்னர் நிஷாந்தின் மீனாட்சியின் கைது செய்த எஸ் எஸ் காலனி காவல்துறையினர் நிஷாந்தின் தந்தை சுரேஷை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் நிஷாந்தின் காதலியான மீனாட்சியை மதுரை மாடக்குளம் பகுதியில் உள்ள நிஷாந்தின் குடும்பத்திற்கு சொந்தமான வயல்வெளி பகுதிக்கு அழைத்துச் சென்றபோது அங்கு 5 கிலோ அளவிற்கு தங்க நகைகளை பதுக்கி வைத்திருப்பதை காவல்துறையினிடம் கூறிய நிலையில் அதனை காவல்துறையினர் கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.

நிதானமாக கொள்ளை

பின்னர் காவல் நிலையத்திற்கு பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து ஜுவல்லரியின் கடையிலிருந்து எடை இயந்திரங்கள் மற்றும் நகை பெட்டிகள் எடுத்து வரப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டன. தமிழகத்தையே உலுக்கிய தனிஷ்க் ஜுவல்லரி நகை கொள்ளை வழக்கில் தனி ஒருவனாக 2 முறை கடைக்குள் புகுந்து வாடிக்கையாளர்கள் போல நோட்டமிட்டதோடு ஒரு முறை சோதனை முறையில் கடையின் மாடி பகுதியில் ஏறிச் சென்று எந்த வழியாக இறங்குவது என பார்த்து சென்றதும் பின்னர் எந்தவித பதட்டமும் இன்றி ஆங்கிலப் படத்தில் நடக்கும் கொள்ளை சம்பவம் போல உள்ளே இறங்கி பொறுமையாக நகைகளை எடுத்துசென்ற காட்சிகளும் பதிவாகியுள்ளது. கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நிஷாந்த் அங்கு வைக்கப்பட்டிருந்த சென்சார் உள்ள பகுதிகளுக்கோ, எந்த தேவையற்ற நகைகளையும் தொடாமல் எந்த தடயங்களும் கிடைக்காத அளவிற்கு பொறுமை காத்து நிதானமாக கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்துள்ளது. மேலும் சிசிடிவி கேமரா இருப்பதை பார்த்தபோது அதில் ஸ்பிரே அடித்து விட்டு இறங்கி சென்றதும் கூட தெரியவந்துள்ளது. நிஷாந்த் கொள்ளையடித்து விட்டு பைக் மூலமாக செல்லும்போது பல்வேறு பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்கள் இருக்கும் பகுதிகளில் திடீரென புதர் பகுதிக்கு செல்வது போன்ற தொடர்ந்து காவல்துறை விசாரணை குழப்பம் ஏற்படுத்துவதற்காக திட்டமிட்டு சென்று வந்ததும் தெரியவந்துள்ளது. தனிஷ் நகைக்கடை கொள்ளை விவகாரத்தில் தனது காதலின் ஆசையை நிறைவேற்றுவதற்காக காதலன் தனி ஒருவனாக கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு தற்போது வரை காவல்துறையில் சிக்காமல் போக்கு காட்டி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே காதலி மீனாட்சி குறுக்கு வழியில் கோடீஸ்வரியாக நினைத்து வாழ்க்கையை தொலைத்து நிற்பதோடு தன்னை நம்பி வந்த காதலனின் வாழ்க்கையையும் அவரது குடும்பத்தின் எதிர்காலத்தையும் சிதைத்து விட்டார்.

களவாணி ஐடியாவில் சிறையில் கம்பி

நகைகளை கொள்ளையடித்த நிஷாந்தின் காதலியான மீனாட்சி பட்டப்படிப்பு முடித்த நிலையில் செல்போன் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறப்பாக கையால கூடிய திறமை படைத்தவர் என்பதால் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பாக Techboss என்ற youtube தளத்தில் பணிபுரிந்துள்ளார். பின்னர் ஊதிய பிரச்சினை காரணமாக வெளியேறி பின்னர் வேறொரு யுடியூப் தளத்தில் பணிபுரிந்தார் அதனை தொடர்ந்து தற்பொழுது தனியாக இன்ஸ்டாகிராமில் பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு வந்ததும் (அரசியல் கட்சிக்கு ஆதரவான வீடியோக்களை பதிவிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதும் ) வீடியோவில் உள்ளன. மேலும் இதே போன்று புதியதாக வீடு கட்டுவது தொடர்பான வீடியோ பதிவு செய்து அதில் வீடு முழுமையாக கட்டுவதற்கு போதிய பணம் இல்லை என்ற புலம்பிய படியான வீடியோவை பதிவிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. தமிழகத்தை உலுக்கிய நகைக்கடை கொள்ளை வழக்கில் நிஷாந்தின் கையில் உள்ள டாட்டூ கொள்ளையனை அடையாளம் காட்டுவதற்கான முக்கிய அடையாளமாக அமைந்துள்ளது. நிஷாந்த் மீது சிறுவயதில் இருந்து சிறிய சிறிய திருட்டுகளில் ஈடுபட்டு வந்ததும் தற்போது காதலிக்காக மிகப்பெரிய அளவிலான கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது. இந்த கொள்ளை சம்பவத்தில் நிஷாந்தின் தந்தை சுரேஷ் நிஷாந்த் கொள்ளை அடித்த நகைகளை பதிக்க வைத்ததற்கு உதவியதாக காவல்துறையினர் கைது செய்து அவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறையினரையே வியக்கும் வைக்கும் வகையில் நிஷாந்த் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றிய நிலையில் நிஷாந்தை பிடிப்பதற்காக தனிப்படையினர் தொடர்ந்து தேடிவருகின்றனர். தொழில்நுட்ப ரீதியாகவும் சிந்தனை ரீதியாகவும் நிஷாந்த் அனைவரையும் வியக்க வைக்கும் வகையில் இருந்தாலும் அதனை நல்ல செயலுக்கு பயன்படுத்தாமல் இது போன்ற கொள்ளை செயலுக்கு பயன்படுத்திய நிலையில் ஒட்டுமொத்த எதிர்கால வாழ்க்கையும் தொலைத்து நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளான். கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நிஷாந்த் கைது செய்யப்பட்ட பின்பு எத்தனை கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது என்பது குறித்தான முழுமையான தகவல் வெளியாக வாய்ப்புள்ளது. நிஷாந்த் மற்றும் மீனாட்சி ஆகிய இருவரும் கல்லூரியில் ஒரே ஆண்டில் படித்த போதும் பாதியில் படிப்பை நிறுத்திய நிஷாந்த் தனது பாதையை மாற்றினாலும் தன்னுடன் படித்த மீனாட்சியை காதலித்து கரம் பிடிப்பதற்காக காத்திருந்த நிலையில் காதலியின் சொன்ன களவாணி ஐடியாவில் சிறையில் கம்பி எண்ணவுள்ளனர்.

நகைகடை கொள்ளை வழக்கு - இருவருக்கு 29 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட நிஷாந்தின் தந்தை சுரேஷ் மற்றும் நிஷாந்தின் காதலி மீனாட்சி ஆகிய இருவரையும் வரும் 29 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க JM3 நீதிபதி சங்கீதா உத்தரவு. இதையடுத்து இருவரும் மதுரை மத்திய சிறைக்கு அழைத்துசெல்லப்பட்டனர்.

Source: Read Full Article