Mohit Ulva :"கல்வெட்டால பொறிக்குற மாதிரி ஒரு பேட்டிங்.." பாகிஸ்தானை தனி ஆளாக பந்தாடிய மோகித்!

Mohit Ulva :"கல்வெட்டால பொறிக்குற மாதிரி ஒரு பேட்டிங்.." பாகிஸ்தானை தனி ஆளாக பந்தாடிய மோகித்!
News Image

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் அல் அமீரகத்தில் நடைபெற்றது. இறுதிப்போட்டியில் நேற்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது.

338 ரன்கள் டார்கெட்:

முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு 338 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அந்த அணியின் உஸ்மான் கான் 107 ரன்களும், அப்துல் காதிர் 80 ரன்களும், கேப்டன் யூசுப் 63 ரன்களும் விளாசினர்.

பாகிஸ்தான் கட்டுப்பாட்டிற்குச் சென்ற ஆட்டம்:

இறுதிப்போட்டி அழுத்தம், பாகிஸ்தானுடனான மோதல், 338 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ராய்சந்தனி - ஆர்யவீர் சேவாக் அற்புதமான தொடக்கம் அளித்தனர். சிறுவர்கள் என்றாலும் ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கு விளாசினர். ஓரிரு ரன்களாக சேர்த்தனர்.

ஆர்யவீர் 58 ரன்களுக்கு அவுட்டாக அடுத்தடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட்டாக கேப்டன் ராய்சந்தனி 80 ரன்களுக்கு அவுட்டானார். ஆட்டம் முழுவதும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டிற்குச் சென்றது. 309 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இந்தியா இழந்து தடுமாறியது.

தனி ஆளாக அசத்திய மோகித்:

16 பந்துகளுக்கு 29 ரன்கள் தேவை என்ற நெருக்கடியான நிலையில், மொத்த பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார் டெயிலண்டர் மோகித் உல்வா. 9வது விக்கெட்டிற்கு உள்ளே அவர் வந்தபோது  51 பந்துகளுக்கு 86 ரன்கள் தேவைப்பட்டது.  இதனால், களமிறங்கியது முதலே அதிரடியாகவே ஆடினார். அடித்தால்  மட்டுமே வெற்றி ஒரு விக்கெட்டும் பறிபோனால் தோல்வி என்ற இக்கட்டான நெருக்கடியில் பவுண்டரியும், சிக்ஸரும் விளாசினார். மறுமுனையில் கடைசி வீரரான சிகுருபதி அவருக்கு இரு பவுண்டரி அடித்து ஒத்துழைப்பு அளித்தார்.

உச்சகட்ட அழுத்தம் என்று சொல்வதற்கு மிகச்சரியான உதாரணமாக இருந்த இந்த போட்டியில் மோகித் உல்வா-வின் உடல்மொழி அவர் எதிர்காலத்தில் மிகப்பெரிய நட்சத்திரமாக ஜொலிப்பார் என்பதை பறை சாற்றியது. கடைசி ஓவரில் 6 பந்துகளுக்கு 8 ரன்கள் தேவை என்ற நிலை வந்தபோது நிதானமாக இருவரும் ஒவ்வொரு ரன்னாக எடுக்க, கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டபோது மோகித் உல்வா இறங்கி வந்து பவுண்டரி விளாசி இந்தியாவை வெற்றி பெற வைத்தார்.

1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பையை வென்று அசத்தியது. ஆட்டத்தை பாகிஸ்தானிடம் இருந்து தனி ஆளாக இந்தியாவிற்கு சாதகமாக மாற்றிய மோகித் 26 பந்துகளில் 5 பவுண்டரி 3 சிக்ஸருடன் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

கடவுளை நம்பினேன்:

18 வயதான மோகித் உல்வால் குஜராத்தைச் சேர்ந்தவர். வெற்றிக்கு பிறகு அவர் கூறியதாவது, நான் கடவுளை நம்பினேன். என் மீதும் எனக்கு நம்பிக்கை வந்தது. இந்த ஆசிய கோப்பை ஒரு பந்துவீச்சாளராக எனக்கு சிறப்பாக அமையாமல் இருக்கலாம். ஆனால், நான் ஒரு ஆல்ரவுண்டர். என்னை நிரூபிக்க  ஒரு வாய்ப்பு கிடைக்காமலே இருந்து வந்தது என்றார்.

ஓரிரு தினங்களுக்கு முன்பு நியூசிலாந்து அணிக்கு எதிராக 334 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய சீனியர் இந்திய அணி 89 ரன்களுக்கு சுருண்ட நிலையில், இந்த இளம்படை இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்துள்ளனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks