தமிழ்நாட்டில் தான் சந்தித்த முதல் தேர்தலிலே ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியில் பெரும்பான்மையானவர்கள் இளைஞர்கள் ஆவார்கள். அரசியலுக்கு புதியதான இவர்களில் அமைச்சரவையில் இடம்பிடித்த பலரும் இளைஞர்களாகவே உள்ளனர்.

வேளாண் அமைச்சர்:

தமிழ்நாட்டில் வேளாண்துறை அமைச்சராக வினோத் பொறுப்பு வகித்து வருகிறார். டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த இவர் கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய அவர் தான் ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று மனம் திறந்து பேசியுள்ளார். அதில் அவர் பேசியதாவது,

இன்னும் திருமணம் ஆகாதது ஏன்?

எனக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்திருக்க வேண்டியது. அப்போதுதான் நமது கட்சியைத் தொடங்கினார்கள். கட்சி தொடங்கி எனக்கு மாவட்டச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டது. அந்த நேரத்தில் எனது கட்டுப்பாட்டில் இருந்த இரு தொகுதிகளிலும் நான் சுற்றுப்பயணத்தில் இருந்தேன். அதனால், அந்த தருணத்தில் என்னால் திருமணம் செய்ய முடியவில்லை.

தளபதி முதல்வரானதும் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு அம்மா கிட்ட ப்ராமிஸ் பண்ணேன்.. அண்ணன் முதல்வர் ஆயிட்டாரு அவர் கையால தாலி எடுத்துக் கொடுத்து கல்யாணம் பண்ணிப்பேன்! - @vinothravi11 நல்லா ஃபன்னா போகுது😂 https://t.co/DYSprk5JIo

— priya (@PriyankaSmile01) November 8, 2026

அதன்பிறகு, விஜய் அண்ணா முதலமைச்சரான பிறகு திருமணம் செய்து கொள்வதாக எங்க அம்மாவிடம் சத்தியம் செய்தேன். அவரும் முதலமைச்சர் ஆகிவிட்டார். கண்டிப்பாக, அண்ணனின் தலைமையில் அண்ணன் தாலி எடுத்துக் கொடுத்துதான் இந்தாண்டோ அல்லது அடுத்தாண்டோ திருமணம் நடந்துவிடும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர் வினோத் 1994ம் ஆண்டு பிறந்தவர். 90-களில் பிறந்த இவர் தொடக்க காலம் முதலே விஜய்யின் ரசிகர் மன்றம் காலம் முதலே பணியாற்றி வந்தார். பொறியியல் படிப்பை பாதியிலே நிறுத்திவிட்டு 2016ம் ஆண்டுக்கு பிறகு வேலை பார்த்து வந்தவர்.

சாதாரண குடும்ப பின்னணியைச் சேர்ந்த இவர் தற்போது தமிழ்நாட்டின் வேளாண்துறையின் அமைச்சராக பாெறுப்பு வகிக்கிறார். தவெக அமைச்சரவையில் உள்ள பலரும் சமீபத்தில் திருமணம் ஆனவர்கள், இளைஞர்களாகவே உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article