கடந்த திமுக ஆட்சியில் தேர்தல் வாக்குறுதியாக மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி 2023ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி மகளிர் உரிமைத் தொகை திட்டம் அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. இரண்டு கட்டங்களாக
மொத்தமாக 1 கோடியே 31 லட்சம் பேருக்கு மகளிர் உரிமை தொகையானது ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி அவரவர் வங்கி கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டு வருகிறது.

மகளிர் உரிமைத் தொகை

இதனிடையே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வராக விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் தேர்தல் வாக்குறுதியாக மகளிருக்கு ரூ.2500 வழங்கப்படும் என கூறியிருந்த நிலையில் தற்போது வரை ரூ.1000 மட்டுமே வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் சேர்க்கப்பட்ட பயனாளிகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளதாக வரும் தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

இதையும் படிங்க: Tamil Nadu Police: சூப்பர் திட்டம்! இனி புகார் கொடுக்க காவல் நிலையம் அலைய வேண்டாம்! 'e-CSR' ரசீது பெறுவது எப்படி?

மகளிர் உரிமைத் தொகை நிறுத்தம்

இதுதொடர்பாக திமுக முன்னாள் அமைச்சரும், திருச்சூலி எம்எல்ஏவுமான தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் சேர்க்கப்பட்ட பயனாளிகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளதாக வரும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன.

வாழ்வாதாரத்தை பாதிக்கும்

மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தைப் படிப்படியாக முடக்குவதற்கு அரசு திட்டமிடுகிறதா என்ற சந்தேகம் தமிழ்நாட்டு மக்களிடையே எழுந்துள்ளது. பெண்களுக்கு மாதம் ரூ.2,500 ஆக உரிமைத்தொகையை உயர்த்தி வழங்கப்போவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, இப்போது ஏற்கெனவே கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தின் கீழ் ரூ.1,000 பெற்று வரும் தகுதியுள்ள பெண்களுக்குக்கூட எந்தக் காரணமுமின்றி அந்தத் தொகையை நிறுத்த முற்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது மட்டுமல்லாமல், அவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கக்கூடியதாகும்.

இதையும் படிங்க: VS Babu: கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை எப்படி இருக்கு? சொல்லுங்க.. அதிரடி முடிவு எடுத்த தொகுதி வாக்காளர்!

எனவே, பயனாளிகளுக்கு குறைந்தபட்சம் வழங்க வேண்டிய ரூ.1,000 உரிமைத்தொகையையாவது தொடர்ந்து வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும். உரியவர்களுக்கான தொகை நிறுத்தப்பட்டிருப்பின் அதற்கான காரணத்தையும் அரசு உடனடியாக விளக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை நிறுத்தப்பட்டதாக செய்தி வெளியான நிலையில் பயனர்கள் அவரவர் வங்கி கணக்கை ஏடிஎம் வாசலில் நின்று சரிபார்த்து வருகின்றனர்.

Source: Read Full Article