Jet Crash: மின்னல் வேகத்தில் தரையில் விழுந்து நொறுங்கிய விமானம்..! நொடியில் பறிபோன 9 உயிர்கள் - முழு வீடியோ

Jet Crash: மின்னல் வேகத்தில் தரையில் விழுந்து நொறுங்கிய விமானம்..! நொடியில் பறிபோன 9 உயிர்கள் - முழு வீடியோ
News Image

Florida Jet Crash: அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் வானில் இருந்து திடீரென கீழே விழுந்து நொறுங்கிய விமானத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

கீழே விழுந்து நொறுங்கிய விமானம்:

அமெரிக்காவின் தெற்கு ஃப்ளோரிடாவில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதிக்கு அருகே, தனியார் விமானம் ஒன்று தலைகுப்புற கவிழ்ந்து அதிவேகமாக சாலையில் விழுந்து நொறுங்கி பெரும் நெருப்பு பந்தை போல வெடித்து சிதறியுள்ளது. இதில் விமானத்தில் பயணித்த 9 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மிகவும் பரபரப்பான சாலையில் விபத்து நிகழ்ந்தபோதிலும் அதிருஷ்டவசமாக, அருகிலிருந்த குடியிருப்பு பகுதிகளுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ எந்தவித சேதமும் ஏற்படவில்லை என அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இணையத்தில் வைரலாகும் வீடியோ காட்சிகள்

காரில் இருந்தபடி பொதுமக்கள் சிலர் பதிவு செய்த விபத்து தொடர்பான காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதன்படி, பஹாமாஸ் நோக்கிச் சென்ற விமானம் வானத்திலிருந்து கீழே பாய்ந்து வந்து, சாலையினல் மோதி பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது. வீடுகளிலிருந்து சில அடி தூரத்திலும், கடந்து செல்லும் வாகனங்களிலிருந்து சில அங்குல இடைவெளியில் மட்டுமே இந்த ஒட்டுமொத்த சம்பவமே அரங்கேறியுள்ளது. தீப்பிழம்புகள் நாலாபுறமும் சிதறுவதை கண்ட அங்கிருந்து மக்கள் அலறி அடித்தபடி ஓடியுள்ளனர். பல அடி உயரத்திற்கு அடர்த்தியான கரும்புகை அப்பகுதியை சூழ்ந்துள்ளது.

FLORIDA JET CRASH: Dashcam footage shows a Learjet 60 nose-dive and explode in Greenacres, Florida. All nine onboard died. NTSB is investigating the tragic accident. https://t.co/maUQQ3djUF
— The J-LATE Show (@THEJLATESHOW) November 1, 2026

9 DEAD AS BAHAMAS-BOUND PRIVATE JET CRASHES IN FLORIDA A Learjet 60 that took off from Texas crashed near homes in Palm Beach County, Florida, killing all nine people on board. The impact triggered a massive fireball, with thick black smoke rising into the sky. Dramatic videos captured the aircraft plunging towards the ground.
— Subodh Kumar (@kumarsubodh_) November 2, 2026

விபத்தில் சிக்கிய விமானத்தின் விவரங்கள்:

அமெரிக்காவின் போக்குவரத்து அமைச்சர் ஷான் டஃபி தகபலின்படி,  பாம் பீச் கவுண்டியில் ஞாயிற்றுக்கிழமை அன்று உள்ளூர் நேரப்படி பிற்பகல் 12:50 மணிக்கு லியர்ஜெட் 60 எனும் வணிக விமானம் விபத்துக்குள்ளானது.  டெக்சாஸில் உள்ள ஆஸ்டின்-பெர்க்ஸ்ட்ரோம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு பஹாமாஸை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து அரங்கேறியுள்ளது.

இதையும் படியுங்கள்: Fishermen Alert: தமிழக மீனவர்களுக்கு இந்திய வானிலை மையத்தின் எச்சரிக்கை..! 125KM வேகத்தில் சூறைக்காற்று

வானிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்..!

விமானம் 35,000 அடி (சுமார் 11 கிலோமீட்டர்) உயரத்தில் கிழக்கு நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, ​​விமானிகள் காற்றுச் சுழற்சி, பனி உறைதல் மற்றும் மழைப்பொழிவு ஆகியவற்றை உணர்ந்து, மேலும் 2,000 அடிக்கு (சுமார் 610 மீட்டர்) உயரத்தை அதிகரிக்குமாறு வலியுறுத்தப்பட்டார். ஆனால் அடுத்த சில நொடிகளிலேயே விமானம் முதலில் நிமிடத்திற்கு 10,000 அடி, பின்னர் 20,000 அடி மற்றும் 30,000 அடி வரை என சரசரவென சரிந்து  செங்குத்தாகக் கீழ்நோக்கிப் பாய்ந்தது. இதனால், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுப் பதிவுகள் மற்றும் விமானப் பயணக் கண்காணிப்புத் தரவுகள் விமானத்தின் வடிவமைப்பு வரம்புகளைத் தாண்டி வேகமாகச் சென்றது. ஒரு விமானி அவசரநிலையை அறிவித்து, ஆபத்து அழைப்புகளை விடுத்தார். விமானம் தரையில் மோதி நொறுங்குவதற்கு முன்பு, கடுமையாக வலதுபுறமாகச் சாய்ந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் ஒட்டுமொத்த கோர சம்பவமும் நடந்து முடிந்துள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks