IND vs NZ: சம்பவம் செய்த நிகோல்ஸ்.. சாத்தி எடுத்த பிலிப்ஸ்.. கம்பேக் கொடுத்த நியூசிலாந்து! முதல் டெஸ்டின் முதல் நாள் எப்படி?

IND vs NZ: சம்பவம் செய்த நிகோல்ஸ்.. சாத்தி எடுத்த பிலிப்ஸ்.. கம்பேக் கொடுத்த நியூசிலாந்து! முதல் டெஸ்டின் முதல் நாள் எப்படி?
News Image

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட்  போட்டி இன்று நியூசிலாந்தில் உள்ள வெலிங்டன் நகரில் நடந்து வருகிறது. போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீசியது.

மிரட்டிய பும்ரா:

ஆட்டத்தை தொடங்கிய நியூசிலாந்தை ஆட்டம் காண வைக்கும் விதமாக பும்ரா மிரட்டலாக பந்துவீசினார். முதல் ஓவரிலே கேப்டன் டாம் லாதமை டக் அவுட்டாக்க, அடுத்த சில நிமிடங்களில் கான்வே 4 ரன்னில் அவுட்டானார். ரவீந்திரா 15 ரன்களுக்கும், மிட்செல் 1 ரன்னுக்கும் அவுட்டாக, விக்கெட் கீப்பர் டாம் ப்ளண்டெலும் 5 ரன்னில் பெவிலியன் திரும்பினார். 70 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து தடுமாறியது.

அப்போது ஹென்றி நிகோல்ஸ் - கிளென் ப்லிப்ஸ் ஜோடி சேர்ந்தனர். இருவரும் களத்தில் முதலில் தங்களை நிலைநிறுத்திக் கொண்டனர். நிகோல்ஸ் இரண்டாவது விக்கெட்டிற்கே களமிறங்கியதால் அவர் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு சவால் அளித்தார்.

நிகோல்ஸ் - பிலிப்ஸ் சிறப்பு:

Test century number 1️⃣2️⃣ for Henry Nicholls 🙌 His fifth Test ton at the Cello Basin Reserve takes him level with Brendon McCullum for Test centuries for New Zealand. #NZvIND | 📸 = @PhotosportNZ https://t.co/Ue8M8bzc6S
— BLACKCAPS (@BLACKCAPS) November 19, 2026

மைதானத்தில் வேகப்பந்துவீச்சு நன்கு ஒத்துழைத்தது. பும்ரா, கம்போஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா என வேகப்பந்துவீச்சாள்ர்கள் மாறி, மாறி வீசினர். ஆனாலும், இருவரும் களத்தில் நங்கூரமாக நின்றனர். மிகவும் பொறுப்புடன் ஆடிய நிகோல்ஸ் அரைசதம் விளாசினார்.

அவருக்கு மறுமுனையில் ஒத்துழைப்பு அளித்த கிளென் பிலிப்ஸ் பவுண்டரிகளாக விளாசினார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய இந்த ஜோடி களத்தில் நிலைத்து நின்று நியூசிலாந்து ஸ்கோரை படிப்படியாக உயர்த்தியது. சிறப்பாக ஆடிய பிலிப்சும் அரைசதம் விளாசினார்.

நிகோல்ஸ் சதம்:

முதல் ஓவரிலே மைதானத்திற்கு உள்ளே வந்த ஹென்றி நிகோல்ஸ் சதம் விளாசினார். அனுபவமிகுந்த ஹென்றி நிகோல்ஸின் சிறப்பான பேட்டிங்கால் நியூசிலாந்தும் நல்ல ரன்களை எட்டியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து 243 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து ஆடியுள்ளது.

நிகோல்ஸ் 113 ரன்களுடனும், கிளென் பிலிப்ஸ் 94 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி சார்பில் பும்ரா 3 விக்கெட்டுகளையும், அன்சுல் கம்போஜ், ஆகாஷ் தீப் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

வேகப்பந்துவீச்சிற்கு ஒத்துழைப்பாக உள்ள இந்த மைதானத்தில் சிராஜை இந்திய அணியில் சேர்க்காதது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks