IND vs NZ: பலமான பேட்டிங்.. பலவீனமா பவுலிங்! தொடங்கியது இந்தியா - நியூசிலாந்து முதல் ! ரோகித், விராட் வந்துட்டாங்க ஃபேன்ஸ்

IND vs NZ: பலமான பேட்டிங்.. பலவீனமா பவுலிங்! தொடங்கியது இந்தியா - நியூசிலாந்து முதல் ! ரோகித், விராட் வந்துட்டாங்க ஃபேன்ஸ்
News Image

நியூசிலாந்து நாட்டிற்குச் சென்ற இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது. டி20 தொடர் நிறைவடைந்த நிலையில், ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியுள்ளது.

முதல் ஒருநாள் போட்டி:

இரு அணிகளும் மோதும் முதல் ஒருநாள் போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் தொடங்கியுள்ளது. மழை காரணமாக சில நிமிடங்கள் தாமதாமானலும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சுப்மன் கில் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து, நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணிக்காக வில் யங் - டிம் செஃபெர்ட் பேட்டிங் செய்து வருகின்றனர்.

இந்திய அணிக்காக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் மீண்டும் களமிறங்கியிருப்பதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த போட்டியை ரசித்து வருகின்றனர். இந்த மைதானம் பேட்டிங்கிற்கு ஒத்துழைக்கும் என்பதால் இரு அணிகளும் பெரியளவில் ரன்மழை பொழியும் என்று கருதப்படுகிறது.

அணி விவரம்:

நியூசிலாந்து அணியில் வில் யங், டிம் செஃபர்ட், ஹென்றி நிகோல்ஸ், டேரில் மிட்செல், டாம் லாதம், கிளென் பிலிப்ஸ், சான்ட்னர்( கேப்டன்), நாதன் ஸ்மித், ஜேமிசன், ஜேக்கப் டஃபி, டிக்னெர் ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.

இந்திய அணியில் கேப்டன் சுப்மன்கில், ரோகித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், அக்ஷர் படேல், கே.எல்.ராகுல், நமன் தீர், அன்சுல் கம்போஜ், அக்யூப் நபி, குர்னூர் ப்ரார்,  அர்ஷ்திப்சிங் களமிறங்கியுள்ளனர்.

பலமான பேட்டிங்:

இரு அணியைப் பொறுத்தமட்டில் பேட்டிங் மிகவும் பலமாக உள்ளது. நியூசிலாந்து அணியில் வில் யங், டிம் செஃபர்ட், நிகோலஸ், மிட்செல், டாம் லாதம், கிளென் பிலிப்ஸ், சான்ட்னர் என பேட்டிங் ஆர்டர் வலுவாக உள்ளது. இந்திய அணியிலும் கேப்டன் சுப்மன்கில், ரோகித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், அக்ஷர் படேல், கே.எல்.ராகுல், நமன்தீர் வரை பேட்டிங் ஆர்டர் வலுவாக உள்ளது.

பலவீனமா பவுலிங்:

இரு அணியைப் பொறுத்தமட்டில் பந்துவீச்சு மிகவும் பலவீனமாகவே உள்ளது.  நியூசிலாந்து அணியைக் காட்டிலும் இந்திய பந்துவீச்சு மிகவும் பலவீனமாக உள்ளது. ஜேமிசன், ஜேக்கப் டஃபி முக்கியமான பந்துவீச்சாளராக நியூசிலாந்து அணிக்கு உள்ளனர்.

டி20 தொடரில் ரன்களை இந்திய அணி வாரி வழங்கிய நிலையில், இந்த தொடரில் சிறப்பாக ஆட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அர்ஷ்தீப்சிங் மட்டுமே இன்றைய போட்டியில் அனுபவ பந்துவீச்சாளர். குர்னூர் ப்ரார், நபி, அன்சுல் கம்போஜ் திறமையாக பந்துவீச வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆல்ரவுண்டர் அக்ஷர் படேல், நமன்தீர் பந்துவீச்சில் ஒத்துழைக்க வேண்டியது அவசியம் ஆகும். டி20 தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி ஒருநாள் தொடரையும் கைப்பற்ற வேண்டிய ஆர்வத்தில் களமிறங்கியுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks