IND vs NZ: ஒரே ஓவரில் 3 டக்.. ரோகித், விராட், ஸ்ரேயாஸ் 0.. மேட் ஹென்றியால் இந்திய ரசிகர்கள் சோகம்!

IND vs NZ: ஒரே ஓவரில் 3 டக்.. ரோகித், விராட், ஸ்ரேயாஸ் 0.. மேட் ஹென்றியால் இந்திய ரசிகர்கள் சோகம்!
News Image

நியூசிலாந்து இந்தியா மோதிய 4வது ஒருநாள் போட்டி இன்று அந்த நாட்டில் உள்ள மவுண்ட் மாங்கனேயில் நடைபெற்றது. கடந்த போட்டிகளில் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் இருந்த நிலையில், இந்த போட்டியிலும் அவர்கள் ஆதிக்கம் இருக்கும் என்றே கருதப்பட்டது. ஆனால், இந்த போட்டி முற்றிலும் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் என்பதை நியூசிலாந்து நிரூபித்தது.

334 ரன்கள் டார்கெட்:

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி வில் யங்கின் சதத்தால் 334 ரன்களை இந்தியாவிற்கு இலக்காக நிர்ணயித்தது. இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணிக்கு நியூசிலாந்து பெரும் தலைவலியாக பந்துவீச்சில் அசத்தி வருகிறது. இன்றைய போட்டியில் ஸ்ரேயாஸ் கேப்டனாக இருப்பதால் ஆட்டத்தை ரோகித் - ருதுராஜ் தொடங்கினர்.

ஒரே ஓவரில் 3 டக் அவுட்:

ஹென்றி வீசிய முதல் பந்திலே ரோகித் சர்மா டக் அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த பிறகு விராட் கோலி களமிறங்கினார். அந்த ஓவரின் 5வது பந்தில் விராட் கோலி போல்டானார். முதல் ஓவரிலே ரன் ஏதும் எடுக்காமல் இந்தியா 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில், அடுத்து வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மேட் ஹென்றி வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் எல்பிடபுள்யூ ஆனார். ஒரே ஓவரில் இந்தியா ஒரு ரன் கூட எடுக்காமல் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்துள்ளது. இதனால், இந்திய ரசிகர்கள் பேரதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.

இந்த சவாலான நிலையில் உள்ள இந்திய அணி இதில் இருந்து மீண்டு வெற்றி பெறுமா? என்பது மிடில் ஆர்டர் மற்றும் பின்வரிசை வீரர்களின் பேட்டிங்கிலே உள்ளது.

அசத்திய நியூசிலாந்து:

முன்னதாக, ஆட்டத்தை வில் யங் - டிம் செஃபெர்ட் தொடங்கினர். கடந்த போட்டிகளில் சொதப்பிய இந்த ஜோடி இன்றைய போட்டியில் சிறப்பாக ஆடியது. ஆட்டத்தை நிதானமாக தொடங்கிய இவர்கள் இருவரும் களத்தில் முதலில் நங்கூரமிட்டனர். சிறப்பாக ஆடிய இவர்கள் ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் விளாசினர்.

அதிரடி காட்டிய செஃபெர்ட் அரைசதம் விளாசினார். அரைசதம் விளாசிய அவர் 48 பந்துகளில் 6 பவுண்டரி 3 சிக்ஸருடன் 58 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த பிறகு வந்த நிக் கெல்லி 4 ரன்னிலும், ஃபாக்ஸ் கிராஃப்ட் 8 ரன்னிலும் அவுட்டானார். அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள் இழந்ததால் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வில் யங் - ஃபின் ஆலன் ஜோடி அபாரமாக ஆடினர்.

வில் யங் சதம்:

இருவரும் இணைந்து அபாரமாக ஆடினார். தொடக்கம் முதலே சிறப்பாக ஆடி வந்த வில் யங் அபாரமாக ஆடி சதம் விளாசினார். கடந்த போட்டிகளில் அவர் சொதப்பி வந்த நிலையில் இன்று அவர் சதம் விளாசினார்.

மறுமுனையில் அபாரமாக ஆடிய ஃபின் ஆலன் 30 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்ஸருடன் 41 ரன்கள் விளாசி அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த பிறகு  களமிறங்கிய வில் யங் 125 ரன்களுக்கு அவுட்டானார். பின்னர் நியூசிலாந்து டெயிலண்டர்கள் உதவியுடன் 333 ரன்களை குவித்தது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks