IND vs NZ 1st Test: சம்.. சம்.. சம்பவம் செய்யும் பும்ரா.. தடுமாறும் நியூசிலாந்து! முதல் டெஸ்டில் இந்தியா மிரட்டல்!

IND vs NZ 1st Test: சம்.. சம்.. சம்பவம் செய்யும் பும்ரா.. தடுமாறும் நியூசிலாந்து! முதல் டெஸ்டில் இந்தியா மிரட்டல்!
News Image

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று வெலிங்டனில் தொடங்கியது. சொந்த மண்ணில் ஆடும் நியூசிலாந்திற்கு எதிராக இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

தாக்குதலைத் தொடங்கிய பும்ரா:

பும்ரா அணிக்கு எந்தளவு தேவை என்பதை ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலே நம்மை உணரவைத்தார். நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் - கான்வே ஆட்டத்தை தொடங்கினர். பும்ரா வீசிய முதல் ஓவரில் 3வது பந்திலே கேப்டன் டாம் லாதம் ரன் ஏதுமில்லாமல் போல்டானார்.

அவருக்கு பிறகு ஹென்றி நிகோலஸ் களமிறங்கினார். மறுமுனையில் கான்வே 4 ரன்னில் கம்போஜ் பந்தில் அவுட்டானார். மைதானம் வேகத்திற்கு ஒத்துழைக்கும் என்பதால் 4 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கிய இந்திய அணி நியூசிலாந்தை திக்குமுக்காட வைத்தது.

வேகப்பந்து வீச்சு மிரட்டல்:

அடுத்து வந்த முக்கியமான வீரர் ரச்சின் ரவீந்திரா நிகோலசுடன் இணைந்து மைதானத்தில் சிறிது நேரம் நின்றார். ஆனாலும், அவரை ஆகாஷ்தீப் அவுட்டாக்கினார். அவர் 50 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 15 ரன்கள் எடுத்து அவுட்டாக, அடுத்து அணியின் மூத்த வீரர் டேரில் மிட்செல் களமிறங்கினார்.

டேரில் மிட்செல்லை களமிறங்கிய சில நொடிகளிலே பும்ரா பெவிலியனுக்கு அனுப்பினார். அவர் 8 பந்துகளில் 1 ரன் எடுத்து அவுட்டாக, தற்போது நியூசிலாந்து அணி 64 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

பும்ரா, கம்போஜ், ஆகாஷ்தீீீ்ப் மற்றும் பிரசித் கிருஷ்ணா மாறி, மாறி தங்களது வேகத் தாக்குதல்களை தொடுத்து வருகின்றனர். சுழலில் ஜடேஜாவிற்கு பதிலாக வாஷிங்டன் சுந்தருடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது.

நியூசிலாந்து தடுமாற்றம்:

மைதானம் வேகப்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும் என்பதா ல் நியூசிலாந்து தடுமாறும் என்றே கருதப்படுகிறது. அந்த அணிக்காக வெளியில் கிளென் பிலிப்ஸ், நாதன் ஸ்மித், ஜேமிசன், மேட் ஹென்றி, ஜேக்கப் டஃபி உள்ளனர். இவர்களில் ப்லிப்ஸ் மட்டுமே பேட்ஸ்மேன் ஆவார்.

இந்திய அணியில் டாப் ஆர்டரில் சாய் சுதர்சனுக்கு பதிலாக கடந்த டெஸ்ட் தொடரில் அசத்திய தேவ்தத் படிக்கல் இடம்பெற்றுள்ளார். இந்த தொடரிலும் அவர் அசத்தினால் இந்திய அணியில் தன்னுடைய இடத்தை அவர் நிரந்தரமாக பிடித்துக் கொள்வார்.

இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குச் செல்ல வேண்டுமென்றால் இந்த டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்ற வேண்டும். இந்திய அணியின் பந்துவீச்சு இந்த போட்டியில் வலுவாக உள்ள நிலையில், கே.எல்.ராகுல், ஜெய்ஸ்வால், படிக்கல், கேப்டன் சுப்மன்கில், ரிஷப்பண்ட், துருவ் ஜுரல், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் பேட்ஸ்மேன்களாக களமிறங்கியுள்ளனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks