தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி செயல்பட்டு வந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து கேரளா மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார். கடந்த 6 மாதங்களாக பொறுப்பு ஆளுநராக செயல்பட்டு வந்தார்.

ஆளுநர் அர்லேகர்

இந்நிலையில் கேரளா ஆளுநர் பொறுப்பில் இருந்து கடந்த அக்டோபர் 12ம் தேதி விடுக்கப்பட்டதை அடுத்து தமிழ்நாட்டின் முழு நேர ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமனம் செய்யப்பட்டுதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அறிவிப்பை வெளியிட்டிருந்தார். கடந்த சில நாட்களுக்கு தமிழக சட்டம் ஒழுங்கு குறித்து மத்திய அரசு அறிக்கை கேட்டதாக செய்திகள் வெளியான நிலையில் டெல்லி சென்ற ஆளுநர் அர்லேகர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் கடந்த 13ம் தேதி அறிக்கையை வழங்கினார். பின்னர் 15ம் தேதி சென்னை திரும்பிய நிலையில் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் ஆளுநர்

தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை அனுமதிக்கப்பட்ட ஆளுநர் இரண்டு நாட்கள் தங்கி சிகிச்சை பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆளுநருடன் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் இருந்து கவனித்து வருகின்றனர்.

ஆளுநர் என்ன காரணத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. ஆளுநருக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Read Full Article