தங்கம் விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வந்த நிலையில் அக்டோபர் மாதத்தில் தங்கம் விலை குறைய தொடங்கியது. பிறகு நவம்பர் மாதத்திலும் தங்கம் விலை சரசரவென சரிந்து வருகிறது. அதாவது கடந்த 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை ரூ.5,120 ரூபாய் குறைந்தது. இந்நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்ததா? குறைந்ததா? என்பதை பார்க்கலாம்.

நேற்று தங்கம் விலை சரசரவென குறைந்தது. அதாவது தங்கம் ஒரு கிராமிற்கு ரூ.80 குறைந்து ரூ.12,615க்கும், ஒரு சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.1,00,920க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

தங்கம் விலை குறைந்ததா?

இந்நிலையில் இன்றைய (நவம்பர் 15) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையில் நீடிக்கிறது. அதாவது சவரன் ரூ.1,00,920ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராம் ரூ.12,615ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 13,762ஆக விற்பனையாகிறது. சவரன் ரூ. 1,10,096ஆக விற்பனையாகிறது. தொடர்ந்து தங்கம் சரிவை சந்தித்து வருவதால் நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.

இதையும் படிங்க: Gold Rate Today: சரசரவென சரிந்த தங்கம் விலை.. சவரன் ரூ.5,120 குறைந்தது.. 4 நாட்களில் தலைகீழாக மாறியது!

வெள்ளி நிலவரம்

கடந்த இரண்டு நாட்களாக வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் நீடிக்கிறது. அதாவது ஒரு கிராம் விலை ரூ.195க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,95,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Source: Read Full Article