Gold Rate Today: தாறுமாறாக குறையும் தங்கம்! இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா? விலை குறைய இதுதான் காரணமா?

Gold Rate Today: தாறுமாறாக குறையும் தங்கம்! இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா? விலை குறைய இதுதான் காரணமா?
News Image

தங்கம் விலை யாரும் எதிர்பாராத வகையில் உயர்ந்த வேகத்தில் தற்போது சரசரவென குறைந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த நவம்பர் 14 சனிக்கிழமை சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 920 ரூபாய்க்கும், கிராமுக்கு 80 ரூபாய் குறைந்து 12,615 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. நவம்பர் 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை. நவம்பர் 16 திங்கள் சவரனுக்கு 600 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 320 ரூபாய்க்கும், கிராமுக்கு 75 ரூபாய் குறைந்து 12,540 ரூபாய் குறைந்தது. நேற்று முன்தினம் நவம்பர் 17 செவ்வாய் கிழமைசவரனுக்கு 560 ரூபாய் குறைந்து 99,760 ரூபாய்க்கும், கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து 12,470 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

நேற்று எவ்வளவு குறைந்தது?

நேற்று தங்கம் விலை எதிர்பாராத வகையில் குறைந்தது. அதாவது தங்கம் ஒரு கிராமிற்கு ரூ.255 குறைந்து ரூ.12,215க்கும், ஒரு சவரனுக்கு  ரூ.2,040 குறைந்து ரூ.97,720க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இன்றைய தங்கம் விலை

இந்நிலையில் இன்றைய (நவம்பர் 19) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,880 குறைந்து ரூ.95,840ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.235 குறைந்து ரூ. 11,980ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.13,069ஆக விற்பனையாகிறது. சவரன் ரூ.104,552ஆக விற்பனையாகிறது.

கடந்த 10 நாட்களில் சவரனுக்கு 9,840 ரூபாய் குறைந்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், மேலும் விலை குறையும் என்ற எதிர்பார்ப்பில் நகை வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

தங்கத்துடன் போட்டி போடும் வெள்ளி

தங்கத்துடன் போட்டி போட்டுக்கொண்டு வெள்ளி விலையும் குறைந்து வருகிறது. அதாவது ஒரு கிராம் விலை ரூ.180க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,80,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks