Gold Rate Today: வாரத்தின் முதல் நாளே அதிர்ச்சி.. இறங்கிய வேகத்தில் எகிறிய தங்கம்.. கவலையில் நகைப்பிரியர்கள்!

Gold Rate Today: வாரத்தின் முதல் நாளே அதிர்ச்சி.. இறங்கிய வேகத்தில் எகிறிய தங்கம்.. கவலையில் நகைப்பிரியர்கள்!
News Image

எப்படியாது சிறிய குண்டு ஊசி தங்கமாவது வாங்க வேண்டும் என்பது நடுத்தர மக்களின் ஆசையாகவும், கனவாகவும் இருந்து வருகிறது. ஆனால் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டி வருகிறது. அதாவது ஒரு சவரன் ஒரு லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வந்தாலும், அதுமட்டுமல்லாமல் செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டி என பில் போட்டு நகைக்கடைகளில் கொள்ளை லாபம் பார்த்து வருகின்றனர்.

அக்டோபரில் சரிவை சந்தித்த தங்கம்

இந்நிலையில் அக்டோபர் மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இதனால் தீபாவளி நெருங்குவதால்  தங்கம் விலை உயரும் கூறப்பட்டு வந்த நிலையில் அக்டோபர் 30ம் தேதி ரூ.1,240, 31ம் தேதி ரூ.2,480 குறைந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தது. அதாவது இரண்டு நாட்களில் மட்டும் ரூ.3,720 குறைந்தது. இந்நிலையில் தொடர்ந்து குறைந்து வந்த தங்கம் வாரத்தின் முதல் நாளான இன்று உயர்ந்ததா? குறைந்ததா? என்பதை பார்க்கலாம்.

நேற்று நவம்பர் 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் நீடித்து வந்தது. தங்கம் ஒரு கிராம் ரூ.12,730க்கும், ஒரு சவரன் ரூ.1,01,840க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இதையும் படிங்க: Chennai Rain: இனிமே தான் மழையின் ஆட்டமே இருக்காம்! சென்னைக்கு டேஞ்சர் அலர்ட்! முரசு புயல் குறித்து டெல்டா வெதர்மேன் பகீர்!

இன்றைய நிலவரம் என்ன?

இந்நிலையில் இன்றைய (நவம்பர் 02) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.1,02,200ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ. 12,775ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 13,936ஆக விற்பனையாகிறது.  சவரன் ரூ. 1,11,488ஆக விற்பனையாகிறது. தீபாவளி நெருங்கம் நிலையில் தங்கம் விலை மீண்டும் உயரத்தொடங்கியுள்ளது நகைப்பிரியர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளி விலை

வெள்ளி விலை கடந்த சில நாட்களாக சரசரவென குறைந்த வந்த நிலையில் இன்று எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் நீடிக்கிறது. ஒரு கிராம் விலை ரூ.200க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.2,00,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks