அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, கச்சா எண்ணை விலை குறைவு, சர்வதேச சந்தையில் தங்கத்தின் ஏற்றம் போன்ற பல்வேறு காரணங்களால் கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை ஏறுமுகத்தில் இருந்து வந்தது. பின்னர் கடந்த அக்டோபர் மாதலே தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வந்தது. தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம் என எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் மீண்டும் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர துவங்கியது.

தீபாவளி பண்டிகை

தீபாவளி பண்டிகை வருவதால் தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சரசரவென குறைந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தது. நேற்று முன்தினம் ரூ.1,560 குறைந்தது. அதாவது கடந்த மூன்று நாட்களில் மட்டும் சவரன் 4,480 ரூபாய் குறைந்தது. இந்நிலையில் தங்கம் விலை இன்று உயர்ந்ததா? குறைந்ததா? இது தான் தங்கம் வாங்க சரியான நேரமா என்பதை பார்க்கலாம்.

நேற்று தங்கம் விலை சரசரவென குறைந்தது. அதாவது தங்கம் ஒரு கிராமிற்கு ரூ.200 குறைந்து ரூ. 12,815க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,600 குறைந்து ரூ.1,02,520க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இதையும் படிங்க: Gold Rate Today: நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்! சரசரவென சரிந்த தங்கம் விலை... இன்று சவரன் எவ்வளவு தெரியுமா?

குஷியில் நகைப்பிரியர்கள்

இந்நிலையில் இன்றைய (நவம்பர் 13) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 குறைந்து ரூ.101,560ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.120 குறைந்து ரூ. 12,695ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 13,849ஆக விற்பனையாகிறது. சவரன் ரூ. 1,10,792ஆக விற்பனையாகிறது. கடந்த நான்கு நாட்களில் மட்டும் ரூ.3,520 குறைந்ததை அடுத்து நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.

குறையும் வெள்ளி

கடந்த இரண்டு நாட்களாக வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில் இன்று கிராமிற்கு ரூ.5 குறைந்துள்ளது. அதாவது ஒரு கிராம் விலை ரூ.195க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,95,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Source: Read Full Article