தங்கத்தை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. ஆனால் தங்கம் விலை கடந்த சில ஆண்டுகளாக வரலாறு காணாத வகையில் உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அக்டோபர் மாதத்தில் தொடர்ந்து சரிவை சந்தித்த வந்த தங்கம் விலை தீபாவளி பண்டிகை காரணமாக தங்கம் விலை உயரும் என வியாபாரிகள் கூறிவந்தனர்.

4 நாட்களில் 4,480 சரிவு

ஆனால் அதற்கு மாற்றாக நவம்பர் மாதம் முதல் வாரத்தில் ஒரிரு நாட்கள் மட்டுமே தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்த நிலையில் மீண்டும் சரசரவென சரிந்து வருகிறது. அதாவது கடந்த 5 நாட்களில் மட்டும் தங்கம் விலை ரூ.4,480 குறைந்தது. இந்நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்ததா? குறைந்ததா? என்பதை பார்க்கலாம்.

நேற்று தங்கம் விலை சரசரவென குறைந்தது. அதாவது தங்கம் ஒரு கிராமிற்கு ரூ.120 குறைந்து ரூ.12,695க்கும், ஒரு சவரனுக்கு ரூ.960 குறைந்து ரூ.101,560க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இன்றைய தங்கம் விலை

இந்நிலையில் இன்றைய (நவம்பர் 14) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 640 குறைந்து ரூ.1,00,920ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.12,615ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 13,762ஆக விற்பனையாகிறது. சவரன் ரூ. 1,10,096ஆக விற்பனையாகிறது. தொடர்ந்து தங்கம் சரிவை சந்தித்து வருவதால் நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையே நீடிக்கிறது. அதாவது ஒரு கிராம் விலை ரூ.195க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,95,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Source: Read Full Article