Gold Rate Today: நேற்று ரூ.2,280 உயர்வு.. இன்று தங்கம் விலை உயர்ந்ததா? குறைந்ததா? இதோ அப்டேட்!

Gold Rate Today: நேற்று ரூ.2,280 உயர்வு.. இன்று தங்கம் விலை உயர்ந்ததா? குறைந்ததா? இதோ அப்டேட்!
News Image

தங்கம் விலை அக்டோபர் மாதத்தில் சரசரவென குறைந்து வந்த நிலையில் நவம்பர் மாதம் தொடக்கத்தில் இருந்து அதிரடியாக உயர்ந்து வருவது நகைப்பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீபாவளி பண்டிகை காரணமாகவே இந்த விலை உயர்வு என கூறப்படுகிறது. அதன்படி, 1-ம் தேதி ஒரு சவரன் ரூ.1,01,840-க்கும், ஒரு கிராம் ரூ.12,730-க்கும், 2-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.1,02,200-க்கும்,  ஒரு கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.12,775-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

3ம் தேதி சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.1,02,400-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.12,800-க்கும், 4ம் தேதி தங்கம் இரண்டு முறை உயர்ந்தது. சவரனுக்கு ரூ. 2,200 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,04,800-க்கும், ஒரு கிராமுக்கு ரூ. 275 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 13,100-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதையும் படிங்க: Gold Rate Today: நகைப்பிரியர்களுக்கு பேரதிர்ச்சி! நான்கு நாட்களில் ரூ.5,240 உயர்ந்த தங்கம்.. இன்று சவரன் எவ்வளவு தெரியுமா?

அதேபோல் நேற்று யாரும் எதிர்பாராத வகையில் தங்கம் விலை உயர்ந்தது. அதாவது தங்கம் ஒரு கிராமிற்கு ரூ.285 உயர்ந்து ரூ. 13,385க்கும், ஒரு சவரனுக்கு ரூ.2,280 உயர்ந்து ரூ. ரூ.1,07,080க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் தங்கம் விலை இன்று உயர்ந்ததா? குறைந்ததா? என்பதை பார்க்கலாம்.

தங்கம் விலை நிலவரம்

இந்நிலையில் இன்றைய (நவம்பர் 06) நிலவரப்படி தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையில் நீடிக்கிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.1,07,080ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராம் ரூ. 13,385ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 14,602ஆக விற்பனையாகிறது.  சவரன் ரூ. 1,16,816ஆக விற்பனையாகிறது.

வெள்ளி உயர்ந்ததா? குறைந்ததா?

வெள்ளி விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்த நிலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் விலை ரூ.210க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.2,10,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks