தங்கம் மற்றும் வெள்ளி விலை போட்டுக் கொண்டு குறைந்து வருகிறது. அதாவது புதிய உச்சத்தில் தொட்டு வந்த தங்கம் விலை கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் தொடர்ந்து சரிவை சந்தித்து வருவது நகைப்பிரியர்களை துள்ளிக்குதிக்க வைத்துள்ளது. அதாவது 15 நாட்களில் சவரன் 15,000 ரூபாய் குறைந்துள்ளது. இதனால் கடந்த சில தொடர்ந்து தங்கம் விலை குறைந்து வருவதை அடுத்து நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. மற்றொரு தரப்பினர் தங்கம் விலை இன்னும் குறையும் என்ற எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்ததா? குறைந்ததா? என்பதை பார்க்கலாம்.

நேற்றும் சரிந்த தங்கம்

நேற்று தங்கம் விலை எதிர்பாராத வகையில் குறைந்தது. அதாவது தங்கம் ஒரு கிராமிற்கு ரூ.235 குறைந்து ரூ.11,980க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,880 குறைந்து ரூ.95,840க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

ஒரே நாளில் இன்ப அதிர்ச்சி

இந்நிலையில் இன்றைய (நவம்பர் 20) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3,760 குறைந்து ரூ.92,080ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.470 குறைந்து ரூ.11,510ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.12,556ஆக விற்பனையாகிறது. சவரன் ரூ.100,448ஆக விற்பனையாகிறது.

தாறுமாறாக குறையும் வெள்ளி

தங்கத்துடன் போட்டி போட்டுக்கொண்டு வெள்ளி விலையும் குறைந்து வருகிறது. அதாவது ஒரு கிராம் விலை ரூ.175க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,75,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சரிவிற்கு என்ன காரணம்?

ஈரான் போர் தொடங்கியதிலிருந்து கச்சா எண்ணெய் விலை குறையும் போதெல்லாம் தங்கம், வெள்ளி விலை குறைந்தது. அதேபோல பணவீக்க அச்சத்தால் உலக மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை அதிகரித்து வருகின்றன. இதனால், முதலீட்டாளர்கள் வங்கி முதலீட்டை நோக்கி நகர்கின்றனர். இதனால், தங்கம் விலை குறைகிறது.

Source: Read Full Article