Gold Rate: 11 மாத காத்திருப்பு..! ரூ.1 லட்சத்திற்கும் கீழ் சரிந்த தங்கம் விலை - ஒரு சவரன், கிராம் எவ்வளவு தெரியுமா?

Gold Rate: 11 மாத காத்திருப்பு..! ரூ.1 லட்சத்திற்கும் கீழ் சரிந்த தங்கம் விலை - ஒரு சவரன், கிராம் எவ்வளவு தெரியுமா?
News Image

Gold Rate Today: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 560 ரூபாய் குறைந்துள்ளது.

ஒரு லட்சதிற்கும் கீழ் சரிந்த தங்கம் விலை:

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து 99 ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் 12 ஆயிரத்து 470 ரூபாயாக உள்ளது. 11 மாதங்களுக்குப் பிறகு சென்னையில் தங்கத்தின் விலை ஒரு லட்சத்திற்கும் குறைவாக வீழ்ச்சி கண்டுள்ளது. கடைசியாக கடந்த ஜனவரி 1ம் தேதி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 99 ஆயிரத்து 520 ரூபாயாக இருந்ததே, மிகக்குறைந்த விலைவரம்பாகும். அதன் பிறகு தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த தங்கம் விலை இன்று சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து 99 ஆயிரத்து 760 ரூபாயாக உள்ளது.

ரூ.6,280 சரிந்த தங்கம் விலை:

கடைசியாக கடந்த 8ம் தேதி ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் தங்கத்தின் விலை, 9ம் தேதி கிராமுக்கு 95 ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன் பிறகு கடந்த 8 நாட்களாக தொடர்ந்து தங்கத்தின் விலை குறைந்தபடியே உள்ளது. அந்த வகையில் 6 ஆயிரத்து 280 ரூபாய் கடந்த 8 நாட்களில் மட்டும் குறைந்துள்ளது.

இதையும் படியுங்கள்: ”திமுக ஆட்சியில் இந்த தெருக்கூத்தாடிகள் பாடியது இனித்ததா?” சேகர் பாபுவிற்கு புஷ்பவனம் கேள்வி

வெள்ளி நிலவரம் என்ன?

சென்னையில் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிலோ 190 ரூபாய்க்க் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 10ம் தேதி வரை 205 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் வெள்ளி அடுத்தடுத்து சரிந்து, கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து 190 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நடுத்தர மக்கள் ஹாப்பி:

நடுத்தர மக்களுக்கு தங்கம் என்பது ஆடம்பரம் என்பதை தாண்டி நம்பகமான முதலீடாக இருந்து வருகிறது. ஆனால், ஜெட் வேகத்தில் உயர்ந்த அதன் விலை ஒரு சவரன் ஒரு லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் வரை எகிற, அதை ஏழைகளுக்கு எட்டாக்கனியாகவே உருவெடுத்தது. சர்வதேச சந்தையில் நிலவிய நிலையற்ற தன்மை, மேற்காசிய நாடுகள் போர் போன்ற பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. ஆனால், தற்போது அமெரிக்கர்கள் அதிகளவில் தங்கத்தை விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. அதன் தாக்கத்தால் சர்வதேச சந்தையை தொடர்ந்து இந்தியாவிலும் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இது நடுத்தர மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks