Fishermen Alert: தமிழக மீனவர்களுக்கு இந்திய வானிலை மையத்தின் எச்சரிக்கை..! 125KM வேகத்தில் சூறைக்காற்று

Fishermen Alert: தமிழக மீனவர்களுக்கு இந்திய வானிலை மையத்தின் எச்சரிக்கை..! 125KM வேகத்தில் சூறைக்காற்று
News Image

Fishermen Alert Murasu Cyclone: முரசு புயலின் தாக்கத்தால் இன்று சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.

தீவிர புயலான ”முரசு”

வங்கக் கடலில் உருவாகியுள்ள முரசு புயல் தீவிர புயலாக உருவெடுத்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை, ஒங்கோலுக்கு அருகிலுள்ள நெல்லூர் மற்றும் நர்சாபூர் இடையே மணிக்கு 100 முதல் 110 கி.மீ வேகத்தில் பலத்த சூறைக் காற்றுடன் இந்த புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விளைவாக ஆந்திராவில் மட்டுமின்றி தமிழ்நாட்டின் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டின் வடகடலோர மாவட்ட மீனவர்களுக்கு குறிப்பிட்ட கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தென்கிழக்கு வங்காள விரிகுடா:

இன்று நண்பகல் வரை தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் மணிக்கு 65-75 கி.மீ வேகத்தில் (அவ்வப்போது 85 கி.மீ வேகத்தில்) பலத்த காற்று வீசக்கூடும். அதன்பிறகு காற்றின் வேகம் படிப்படியாகக் குறைந்து, நவம்பர் 2ம் தேதி இரவு முதல் மணிக்கு 50-60 கி.மீ வேகத்தில் (அவ்வப்போது 70 கி.மீ வேகத்தில்) காற்று வீசும். அதன் பின்னரும் காற்றின் வேகம் படிப்படியாகக் குறையும்.

தென்மேற்கு வங்காள விரிகுடா:

மணிக்கு 80-90 கி.மீ வேகத்தில் (அவ்வப்போது 100 கி.மீ வேகத்தில்) பலத்த காற்று வீசிக் கொண்டிருக்கிறது. இது படிப்படியாகக் குறைந்து, இன்று மாலை முதல் மணிக்கு 50-60 கி.மீ வேகத்திலும் (அவ்வப்போது 70 கி.மீ வேகத்திலும்), நாளை காலைக்குள் மணிக்கு 40-50 கி.மீ வேகத்திலும் (அவ்வப்போது 60 கி.மீ வேகத்திலும்) வீசும். அதன்பிறகு காற்றின் வேகம் மேலும் குறையும்.

இதையும் படியுங்கள்: TN Weather News: தீவிர புயலாக உருவெடுத்த முரசு..! இன்று மிக கனமழை எச்சரிக்கை, சென்னை? தமிழக வானிலை அறிக்கை

மேற்கு-மத்திய வங்காள விரிகுடா:

மணிக்கு 90-100 கி.மீ வேகத்தில் (அவ்வப்போது 115 கி.மீ வேகத்தில்) பலத்த காற்று வீசிக் கொண்டிருந்த நிலையில், படிப்படியாக அதிகரித்து, இன்று காலை முதல் மணிக்கு 95-105 கி.மீ வேகத்திலும் (அவ்வப்போது 115 கி.மீ வேகத்திலும்) காற்று வீசி வருகிறது. நள்ளிரவு முதல் நவம்பர் 3-ஆம் தேதி முற்பகல் வரை மணிக்கு 100-110 கி.மீ வேகத்திலும் (அவ்வப்போது 120 கி.மீ வேகத்திலும்) வீசக்கூடும். அதன்பிறகு காற்றின் வேகம் படிப்படியாகக் குறைந்து, நவம்பர் 3-ம் தேதி பிற்பகலில் மணிக்கு 55-65 கி.மீ வேகத்திலும் (அவ்வப்போது 75 கி.மீ வேகத்திலும்), நள்ளிரவு முதல் அடுத்த 6 மணி நேரத்திற்கு மணிக்கு 40-50 கி.மீ வேகத்திலும் (அவ்வப்போது 60 கி.மீ வேகத்திலும்) வீசும்; அதன் பிறகு நிலைமை சீரடையும்.

வட தமிழ்நாடு அதனை ஒட்டிய கடல் பகுதிகள்

மணிக்கு 40-50 கி.மீ (இடை இடையே 60 கி.மீ வேகம் வரை) வேகத்தில் பலத்த காற்று வீசி வந்தது. இது படிப்படியாக அதிகரித்து, இன்று அதிகாலை முதல் மணிக்கு 55-65 கி.மீ (இடை இடையே 75 கி.மீ வேகம் வரை) வேகத்திலும் வீசி வருகிறது.  மாலை முதல் நவம்பர் 3ம் தேதி காலை வரை மணிக்கு 60-70 கி.மீ (இடை இடையே 80 கி.மீ வேகம் வரை) வேகத்திலும் வீசக்கூடும். அதன்பிறகு காற்றின் வேகம் படிப்படியாகக் குறைந்து, நவம்பர் 3ம் தேதி பிற்பகல் முதல் அடுத்த 6 மணி நேரத்திற்கு மணிக்கு 40-50 கி.மீ (இடை இடையே 60 கி.மீ வேகம் வரை) வேகத்தில் வீசக்கூடும்” என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks