DMK On TN Govt: சட்ட-ஒழுங்கை நிலைநாட்ட தவெக அரசு தவறிவிட்டதாக திமுக குற்றம்சாட்டியுள்ளது.

தவெக ஆட்சியின் கொலை தீபாவளி

தீபாவளி பண்டிகை நாளில் நடந்த குற்றச்சம்பவங்களை சுட்டிக்காட்டி, இது தவெக ஆட்சியின் கொலை தீபாவளி என திமுக கடுமையாக சாடியுள்ளது. இதுதொடர்பான சமூக வலைதள பதிவில், “ பண்டிகை நாட்களைக் கூட மக்கள் நிம்மதியாக கொண்டாட முடியாத படி தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கிடப்பதற்கு தீபாவளி நாளில் ஒரு காவலர் உட்பட 11க்கு மேற்பட்ட கொ*லைகள் நடந்துள்ளதே சாட்சியாக உள்ளது. ரீல்ஸ் சிஎம் ஆள்கிறார் என்பதால் தறி கெட்டு அலையும் கூட்டம் சாலையிலேயே ரீல்ஸ் எடுக்க, அதை தட்டிக்கேட்ட தேனி சிறப்பு எஸ்ஐ வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார்.

அடுத்தடுத்து குற்றச்சம்பவங்கள்:

கடலூரில் ஒரு கூட்டத்தால் நான்கைந்து காவலர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். போலீசுக்கே பாதுகாப்பு இல்லாத போது பொது மக்களின் நிலை என்ன? நேற்று மட்டும் ஒரே நாளில் ஒன்பது கொலைகள். 18 வயது இளைஞன் தொடங்கி வயது வித்தியாசமின்றி அனைவரும் குரூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர் கொலைகளை செய்தியாக்கும் ஊடக நிறுவனங்களுக்கு போன் செய்து செய்தியாக்காமல் தடுக்கும் வேகம் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் இல்லை. மக்கள் எல்லாவற்றையும் கவனித்து கொண்டிருக்கிறார்கள். கேடுகெட்ட ஆட்சிக்கு இது தலை தீபாவளி. தமிழ்நாட்டு மக்களுக்கு கொலை தீபாவளி”என திமுக கடுமையாக சாடியுள்ளது.

தவெக ஆட்சியின் கொ** தீபாவளி! பண்டிகை நாட்களைக் கூட மக்கள் நிம்மதியாக கொண்டாட முடியாத படி தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கிடப்பதற்கு தீபாவளி நாளில் ஒரு காவலர் உட்பட 11க்கு மேற்பட்ட கொ*லைகள் நடந்துள்ளதே சாட்சியாக உள்ளது. ரீல்ஸ் சிஎம் ஆள்கிறார் என்பதால் தறி கெட்டு அலையும் கூட்டம் சாலையிலேயே ரீல்ஸ் எடுக்க, அதை தட்டிக்கேட்ட தேனி சிறப்பு எஸ்ஐ வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார். கடலூரில் ஒரு கூட்டத்தால் நான்கைந்து காவலர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். போலீசுக்கே பாதுகாப்பு இல்லாத போது பொது மக்களின் நிலை என்ன? நேற்று மட்டும் ஒரே நாளில் ஒன்பது கொ*கள். 18 வயது இளைஞன் தொடங்கி வயது வித்தியாசமின்றி அனைவரும் குரூரமான முறையில் கொ*ல்லப்பட்டுள்ளனர் கொ*களை செய்தியாக்கும் ஊடக நிறுவனங்களுக்கு போன் செய்து செய்தியாக்காமல் தடுக்கும் வேகம் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் இல்லை. மக்கள் எல்லாவற்றையும் கவனித்து கொண்டிருக்கிறார்கள். கேடுகெட்ட ஆட்சிக்கு இது தலை தீபாவளி. தமிழ்நாட்டு மக்களுக்கு கொ* தீபாவளி.

— DMK (@arivalayam) November 9, 2026

Source: Read Full Article