CM Vijay: முதலமைச்சருக்கு அரோகரா.. சூரசம்ஹாரத்தில் எல்லை மீறிய வர்ணணையாளர்! குவியும் கண்டனங்கள்

CM Vijay: முதலமைச்சருக்கு அரோகரா.. சூரசம்ஹாரத்தில் எல்லை மீறிய வர்ணணையாளர்! குவியும் கண்டனங்கள்
News Image

தமிழ்க்கடவுள் முருகப்பெருமானுக்கு மிக மிக உகந்த நாட்களில் ஒன்றாக கந்தசஷ்டி திருவிழா உள்ளது. கந்தசஷ்டி திருவிழாவின் மிக மிக முக்கியமான நாட்களில் ஒன்றாக சூரசம்ஹாரம் உள்ளது.

முதலமைச்சருக்கு அரோகரா:

திருச்செந்தூர் கடற்கரையில் நேற்று நடந்த சூரசம்ஹார நிகழ்வில் முருகனுக்கு அரோகரா என்ற கோஷம் விண்ணைப் பிளந்த நிலையில், நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய வர்ணணையாளர்கள் குழுவினர் முதலமைச்சர் விஜய்க்கு அரோகரா.. அமைச்சர் ரமேஷிற்கு அரோகரா என்று கோஷங்களை எழுப்பினர்.

தமிழ்க் கடவுள் முருகப்பெருமானை இழிவுபடுத்திய தவெக அரசுக்கு கடும் கண்டனம்! திருச்செந்தூர் அருள்மிகு செந்திலாண்டவர் சூரசம்ஹாரம் நிகழ்வின் போது, அரசு சார்பில் வர்ணனை செய்தோர் மற்றும் பாடல் பாடிய தமிழ்நாடு இயல் இசை நாடகமன்றத் தலைவர் திரு. புஷ்பவனம் குப்புசாமி உள்ளிட்டோர் தமிழ்க் கடவுள் முருகப் பெருமானுடன் இன்றைய முதல்வரை ஒப்பிட்டு பேசியது முருக பக்தர்களைக் கொந்தளிக்கச் செய்துள்ளது. ஒரு ஆன்மீகத் தளத்தை அரசியல் மேடை போல் பயன்படுத்தி, மனமுருகி வேண்ட வந்த பக்தர்களை முகம் சுளிக்க வைத்த தவெக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது. அதற்கும் மேல், விழாவின் போது நடிக முதல்வருக்கும், ரசிக அறநிலையத்துறை அமைச்சருக்கும் “அரோகரா” கோஷமிட்டதாக செய்திகள் வருகின்றன. இப்படி எல்லாம் கோஷமிட்டு தான் புளகாங்கிதம் அடைய தமிழ்க்கடவுளை இழிவுசெய்ய வேண்டுமா இந்த ஆச்சரியக்குறி அரசுக்கு? இந்த அரசுக்கும், முதல்வருக்கும், அமைச்சர் @RameshOffcl அவர்களுக்கும் கொஞ்சம் கூட வெட்கமாக இல்லையா? ஆச்சரியக்குறிக்கு அரோகரா ஒரு கேடா ? தமிழ்க் கடவுளை இந்த அளவிற்கு இழிவு படுத்தத் துணிந்துவிட்ட இந்த ஆணவ அரசின் கொட்டமும் விரைவில் சூரசம்ஹாரம் செய்யப்படும்! இது உறுதி! #ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
— Navaneethakannan R-Say Yes To Women Safety &AIADMK (@NavaneethanNj) November 16, 2026

இ்ந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ்க்கடவுளாக கொண்டாடப்படும் முருகப்பெருமானுக்கு இணையாக விஜய்யையும், அமைச்சர் ரமேஷையும் ஒப்பிட்டு பேசுவதா? அதுவும் சூரசம்ஹார நிகழ்வில் இதைச் செய்யலாமா? பக்தர்கள் கொண்டாடும் இந்த சூரசம்ஹார நிகழ்வில் அரசியல் செய்யலாமா? என்று கண்டனங்கள் குவிந்து வருகிறது.

குவியும் கண்டனம்:

அரசியல் தலைவர்கள் முதல் பக்தர்கள் வரை பலரும் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் விஜய் அடிப்படையில் கிறிஸ்தவர் என்றாலும் அவர் அனைத்து மதத்தினருக்கும் பொதுவானவராகவே மக்களால் பார்க்கப்படுகிறார். ஏனென்றால் அவர் நடித்த படங்களில் அவரது கதாபாத்திரங்களும் அப்படியே அமைந்திருந்தது.

அவரும் அடிப்படையில் சாய்பாபா பக்தராக உள்ளார். மேலும், தனது தேர்தல் பரப்புரையில் வேலை கையில் ஏந்தி பல இடங்களில் பரப்புரை மேற்கொண்டார். தேர்தல் முடிந்த பிறகு முடிவுகளுக்கு முன்னதாக விஜய் திருச்செந்தூர் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனமும் செய்தார். சமீபத்தில் கர்நாடகா சென்று அங்குள்ள மூகாம்பிகை கோயிலிலும் சாமி தரிசனம் செய்தார்.

பக்தர்கள் வேதனை:

அவர் தீவிர இறை பக்தராக இருந்தாலும் கோடிக்கணக்கான பக்தர்கள் வணங்கும் இறைவனின் திருவிழாவில் இறைவனுக்கு நிகராக விஜய்யின் பெயரை உச்சரித்தது பக்தர்களுக்கும் மனதை காயப்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விரைவில் தவெக அரசு சார்பில் அமைச்சர் விளக்கம் அளிப்பார் என்று கருதப்படுகிறது. மேலும், தமிழக முதலமைச்சரைப் போல வேல் எடுத்து என்றும் ஒப்பிட்டுப் பேசியதும் பக்தர்களுக்கு சங்கடத்தை உருவாக்கியுள்ளது. வர்ணனையாளர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கருதப்படுகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks