தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பில் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக மாநிலம் முழுவதும் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மின்தடை செய்யப்படும் நேரத்தில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல், மின்வயர் செல்லும் பாதையில் உள்ள மரக்கிளைகள் வெட்டுவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.

இது தொடர்பாக, அப்பகுதி மக்களுக்கு சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும். அந்த வகையில், நாளை தினம் (18-10-2026) புதன்கிழமை கீழ்கண்ட பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

பல்லாவரம்

ஜிஇ நிறுவனம், ராணுவ குடியிருப்புகள், ஏர் இந்தியா, டிஆர்டிஓ, தாஜ் விமான சமையலறை, பிபிசிஎல், எல்&டி, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மின்தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முன்கூட்டியே முடியும் பட்சத்தில் மின்தடை வழங்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பாக சமாளிக்க முடியும்

மின்தடை ஏற்பட்டதும் டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏசி, கம்ப்யூட்டர் போன்ற அதிக மின்சாரம் இழுக்கும் சாதனங்களின் சுவிட்சுகளை அணைத்து, பிளக்குகளைப் பிடுங்கி வைக்க வேண்டும். மீண்டும் மின்சாரம் வரும்போது ஏற்படும் உயர் மின்னழுத்தத்தால் சாதனங்கள் பழுதாக வாய்ப்புள்ளது.

லிஃப்ட் பயன்படுத்தக் கூடாது

மின்தடை அறிவிக்கப்பட்ட நேரத்திற்குச் சற்று முன்பிலிருந்தே அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் அலுவலகங்களில் லிஃப்ட் பயன்படுத்துவதைத் தவிர்த்து, படிக்கட்டுகளைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது.

Source: Read Full Article