Car Accident: ஜீப் மீது மோதி அந்தரத்தில் பறந்த கார்..! தப்பித்து ஓட முயன்ற பெண் படுகாயம் - வைரல் வீடியோ

Car Accident: ஜீப் மீது மோதி அந்தரத்தில் பறந்த கார்..! தப்பித்து ஓட முயன்ற பெண் படுகாயம் - வைரல் வீடியோ
News Image

Himachal Car Accident:  கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக வந்த கார் மோதியில் நகர்ந்த ஜீப் முட்டி, சாலையோரம் சென்று கொண்டிருந்த பெண் காயமடைந்துள்ளார்.

கட்டுப்பாட்டை இழந்த கார்..!

இமாச்சலபிரதேசத்தில் அதிவேகமாக வந்து கட்டுப்பாட்டை இழந்த மாருதி ஸ்விஃப்ட் கார் சாலையோரம் நின்று இருந்த ஜீப் மீது மோதியதால் ஏற்பட்ட பயங்கர விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளன. சோலன் மாவட்டத்தில் ஏற்பட்ட இந்த விபத்தில் கார் மோதிய தாக்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஜீப், சில நொடிகள் காற்றில் எழும்பியுள்ளது. இந்த விபத்தால் சாலையோரம் நடந்து சென்ற பெண் படுகாயமடைந்த நிலையில், விபத்தை ஏற்படுத்திய கார் காற்றில் பறந்து சாலையில் தலைகுப்புற கவிழ்ந்துள்ளது.

வைரலாகும் வீடியோ:

சோலன் மாவட்டத்தில் தத்தாவல் பகுதியில் நடந்த இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் ஜீப் ஒன்று சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்க, அதை ஒட்டியபடி செல்போனில் பேசிக்கொண்டே பெண் ஒருவர் நடந்து சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த ஸ்விஃப்ட் கார் ஒன்று அதிவேகமாக கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதையும் படியுங்கள்: ICC Worldcup: மீண்டும் இந்தியாவில் ODI உலகக் கோப்பை..! பட்டியலை வெளியிட்ட ஐசிசி - சாம்பியன்ஸ் ட்ராபி எப்போது?

உடனே சுதாரித்த அந்த பெண் பின்னோக்கி ஓட தொடங்கியுள்ளார். ஆனால், கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்விஃப்ட் கார் ஜீப் மீது பயங்கரமாக மோதி, காற்றில் பறந்து சுழன்று தரையில் விழுந்து உருண்டோடியுள்ளது. இதனிடையே கார் மோதியதில் அதிவேகமாக நகர்ந்த ஜீப், முன்னே தப்பிச் செல்ல முயன்ற பெண் மீது மோதியதோடு, அருகில் அடுக்கிவைக்கப்பட்டுள்ள பெட்டிகளுக்குள் நுழைந்துள்ளது.

Car Crashes into Parked Open Jeep, Hits Woman in #Nalagarh #HimachalPradesh A car lost control and collided with a parked open jeep outside a roadside shop in Nalagarh, Solan district, Himachal Pradesh, according to CCTV footage. The impact overturned the jeep and struck a woman who was walking nearby. Details about her condition and any injuries are still awaited.
— Siraj Noorani (@sirajnoorani) November 15, 2026

பெண் படுகாயம்..

விபத்தால் எழுந்த பலத்த சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்து கடைகளில் இருந்த பொதுமக்கள் உடனே வெளியே வந்துள்ளனர். கார் மோதி காயமடைந்து கீழே விழுந்து கிடந்த பெண்ணை மீட்டு, முதலுதவி செய்து அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அதேநேரம் காரை ஓட்டி வந்தவருக்கு என்ன ஆனது, அதில் எத்தனை பேர் இருந்தார்கள் என்பது தொடர்பான உறுதியான தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை.  இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks