"செமத்தியான ப்ளேயர்யா.." பெஞ்சில் உட்காரவைக்கப்பட்ட சிராஜ், ஜடேஜா! கம்பீர், கில்லை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!

"செமத்தியான ப்ளேயர்யா.." பெஞ்சில் உட்காரவைக்கப்பட்ட சிராஜ், ஜடேஜா! கம்பீர், கில்லை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!
News Image

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று அந்த நாட்டில் உள்ள வெலிங்டன் நகரத்தில் தொடங்கியது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசி வருகிறது.

சிராஜ், ஜடேஜா இல்லாமலா?

ஆட்டத்தை தொடங்கிய நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் சிராஜ், ஆல்ரவுண்டர் ஜடேஜா இல்லாதது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

வெளிநாட்டு மண்ணில் சிறப்பாக பந்துவீசும் சிராஜ் இல்லாமல் எப்படி களமிறங்கலாம்? என்றும், வலுவான பந்துவீச்சைக் கொண்ட நியூசிலாந்திற்கு எதிராக ஜடேஜா-வைச் சேர்க்காதது ஏன்? என்றும் முன்னாள் வீரர்கள் உள்பட பலரும சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அர்ப்பணிப்பு:

இந்திய அணி இந்த டெஸ்ட் போட்டியில் பும்ரா, கம்போஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா ஆகிய 4 வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்துவீச்சாளர் வாஷிங்டன் சுந்தருடன் களமிறங்கியுள்ளது. இதில் பிரசித் கிருஷ்ணாவிற்கு பதிலாக சிராஜையும், வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ஜடேஜாவையும் சேர்த்திருக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

கடந்த முறை இங்கிலாந்து சென்ற இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாக திகழ்ந்தவர் முகமது சிராஜ். பும்ரா-வால் முழு தொடரும் ஆட இயலாத சூழல் ஏற்பட்டபோது அந்த தொடர் முழுவதும் தனது அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். அவரது பந்துவீச்சு ஆற்றலைக் கண்டு பிரமித்த இங்கிலாந்து வீரர் ஜோ ரூட், சிராஜைப் போல ஒரு அர்ப்பணிப்பான பந்துவீச்சாளரை பார்த்தது இல்லை என்று கூறினார். இந்திய அணிக்காக ஆடும்போதும் சரி, ஐபிஎல் போட்டிக்காக ஆடும்போதும் சரி சிராஜின் அர்ப்பணிப்பு என்பது அனைவராலும் பாராட்டப்பட்டது ஆகும்.

மறுக்கப்படும் வாய்ப்பு?

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மைதானங்களில் சிறப்பாக பந்துவீசிய சிராஜ் மற்றும் ஜடேஜாவை ஓரங்கட்டியிருக்கும் பயிற்சியாளர் கம்பீர், கேப்டன் கில்லுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது. குறிப்பாக, சமீபகாலமாக முகமது சிராஜிற்கு போதியளவு வாய்ப்புகள் வழங்கப்படாமல் மறுக்கப்பட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டை வலுவாகவே ரசிகர்கள் எடுத்து வைத்துள்ளனர்.

32 வயதான சிராஜ் இந்திய அணிக்காக 48 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 144 விக்கெட் வீழ்த்தியுள்ளார். 37 வயதான ஜடேஜா 91 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 356 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். ஜடேஜா ஆல்ரவுண்டர் என்பதால் அவர் 4 ஆயிரத்து 160 ரன்களும் எடுத்துள்ளார். சிராஜ் எடுத்த விக்கெட்டுகளில் 91 விக்கெட்டுகள் சேனா எனப்படும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக எடுத்தது ஆகும்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks