டீசல் இன்ஜின் வாடகைக்கு கூட பணமில்லை... சம்பா பயிரைக் காக்க தேங்கிய தண்ணீரில் ஹோஸ் போட்டு போராடும் விவசாயிகள்:

டீசல் இன்ஜின் வாடகைக்கு கூட பணமில்லை... சம்பா பயிரைக் காக்க தேங்கிய தண்ணீரில் ஹோஸ் போட்டு போராடும் விவசாயிகள்:
News Image

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே காயும் சம்பா பயிர்களை காப்பாற்றா டீசல் இன்ஜினை வாடகைக்கு எடுக்க பணம் இல்லாததால் கல்லணைக்கால்வாய் ஆற்றில் தேங்கி நிற்கும் தண்ணீரை பைப் ஹோஸ் வைத்து காற்றை வாயால் உறிஞ்சி வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் விவசாயிகள்.

காவிரி பாசனப் பகுதிகளில் தண்ணீரின் நிலை நாளுக்கு நாள் அதளபாதாளத்திற்குச் சென்று கொண்டிருக்கிறது. மேட்டூர் அணை தாமதமாக திறக்கப்பட்டது. காவிரி நீர் வரத்து இல்லாத நிலை போன்றவற்றால், டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. குறிப்பாக, குறுவை சாகுடியை முழுமையாக இழந்துவிட்டு, தற்போது கையில் இருக்கும் சம்பா சாகுபதியையாவது காப்பாற்ற வேண்டும் என்ற தவிப்பில் இருக்கும் விவசாயிகள் படும்பாடு வார்த்தைகளில் சொல்லி மாளாத ஒன்று.

இதற்குச் சாட்சியாகத் தஞ்சாவூர் அருகே கண்டிதம்பட்டு பகுதியில் நடந்துள்ள ஒரு கண் கலங்க வைக்கும் சம்பவம் அப்பகுதி மக்களை மட்டுமின்றி சுற்றுப்பகுதியை சேர்ந்த உள்ள விவசாயிகளையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

தஞ்சாவூர் சுற்றியுள்ள கிராமங்களில் சம்பா மற்றும் தாளபடி பயிர்கள் தற்போது தண்ணீரின்றி கருகும் அபாயத்தை எதிர்நோக்கி நிற்கின்றன. கல்லணை கால்வாய் மற்றும் அதன் கிளை வாய்க்கால்களில் முறைப்படி தண்ணீர் திறக்கப்படாததால், பாசனப் பரப்புகள் அனைத்தும் வெடிப்புடன் காணப்படுகின்றன. அருகில் உள்ள நீர்நிலைகளிலும் நீர் வற்றிவிட்ட நிலையில், ஆற்றில் எஞ்சியுள்ள சிறிதளவு தண்ணீரைத் தன் வயலுக்கு கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர்.

வழக்கமாக தண்ணீர் இல்லாத நிலையில் நீர் நிலைகளில் இருந்து வயல்களுக்குத் தண்ணீர் பாய்ச்ச டீசல் இன்ஜின்களை வாடகைக்கு அமர்த்துவது வழக்கம். ஆனால், தொடர் விவசாய நஷ்டம் காரணமாகக் கையில் பணம் இல்லாத நிலையில் விவசாயிகள் சிலர், டீசல் இன்ஜின் வாடகைக்குக் கொடுக்கக் கூட யாரிடமும் பணம் கேட்க முடியாத பரிதாப நிலையில் உள்ளனர். தன் கண்ணெதிரே கருகும் பயிர்களைக் காப்பாற்ற வேறு வழியறியாமல், கல்லணை கால்வாய் ஆற்றின் கரையில் நின்று கொண்டு, ஹோஸ் பைப்பை தேங்கி நிற்கும் தண்ணீரில் போட்டு அதன் மறுமுனையில் தண்ணீரை நிரப்பி பின்னர் வயலில் வைக்கின்றனர். சில நேரத்தில் ஹோஸ் பைப்பில் உள்ள காற்றை வாயால் உறிஞ்சி தண்ணீரை வயலுக்குப் பாய்ச்சும் அவலமும் நடக்கிறது.

"எங்கள் வாழ்வாதாரமே இந்த விவசாயம்தான். வேறு எந்த தொழிலும்ட தெரியாது. மேட்டூர் அணை உரிய காலத்தில் திறக்கப்படாததால், எங்களால் குறுவை சாகுபடியைத் தொடங்கவே முடியவில்லை. விதைத்த நெல்மணிகள் கருகியதை நெஞ்சில் சுமந்தோம். இப்போது எப்படியாவது சம்பா சாகுபடியைக் காப்பாற்றிவிடலாம் என்று நம்பியிருந்தோம்.

ஆனால், கல்லணை கால்வாயிலும் தண்ணீர் முறையாக வந்து சேரவில்லை. வாய்க்கால்கள் வறண்டு கிடக்கின்றன. டீசல் இன்ஜின் வாடகைக்குக் கொடுக்கக் கூட எங்களிடம் பணமில்லை. ஹோஸ் பைப்பை கல்லணைக்கால்வாய் ஆற்றில் வரும் சிறிதளவு தண்ணீர், தேங்கி கிடக்கும் தண்ணீரில் போட்டு வாயால் உறிஞ்சி மறுமுனையை வயலில் விட்டு தண்ணீர் பாய்ச்சி வருகிறோம். என்று அப்பகுதி விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

உலகிற்கே உணவு தரும் உழவனின் குரல்வளையை நெரிக்கும் இந்த வறட்சிச் சூழலில், அரசின் முறையான பாசன மேலாண்மையும், உரிய நிவாரணமும் மட்டுமே அவர்களின் கண்ணீரைத் துடைக்க முடியும். டீசல் இன்ஜினுக்கு வாடகைக்கூட தர வசதியில்லாமல், தன் சொந்த உடல் உழைப்பையும் தாண்டி, வாயால் தண்ணீர் உறிஞ்சிப் போராடும் இந்த விவசாயியின் அவல நிலை, டெல்டா விவசாயத்தின் இன்றைய யதார்த்தச் சுமையை உலகுக்கு உரக்கச் சொல்கிறது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் கருகும் பயிர்களைக் காப்பாற்ற தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு, தடையற்ற நீர் விநியோகத்தை உறுதி செய்வதோடு, வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணத் தொகையை உடனே வழங்க வேண்டும் என்பதே வலுத்து வரும் கோரிக்கையாக உள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks