மது போதையில் வந்து, கார்த்தியின் மனைவி முனீஸ்வரி மற்றும் கார்த்தி 16 வயது மகள் அனைவரிடமும் வாக்குவாதம் செய்துள்ளனர்.

குழந்தைகளுடன் வீட்டின் அருகே பட்டாசு வெடித்துள்ளார்

மதுரை கீரைத்துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீரைத்துறை மேலதோப்பு காம்புவுண்ட் பகுதியில் கார்த்தி (35) என்பவர், தீபாவளி அன்று தனது குழந்தைகளுடன் வீட்டின் அருகே பட்டாசு வெடித்துள்ளனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கோபி, பொன்ராஜ், தனுஷ் என்கிற தனுக்கொடி, மணிமுருகன் ஆகிய 4 பேர் மது போதையில் வந்து, கார்த்தியின் மனைவி முனீஸ்வரி மற்றும் கார்த்தி 16 வயது மகள் அனைவரிடமும் வாக்குவாதம் செய்துள்ளனர்.

காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை

இதையடுத்து 4 பேரும் வைத்திருந்த அரிவாளால் கார்த்தியின் மனைவி முனீஸ்வரி மற்றும் கார்த்தி 16 வயது மகள் ஆகியோரை வெட்டி காயம் ஏற்படுத்தியதோடு கொலை செய்து விடுவதாக மிரட்டிவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடியுள்ளனர். இது தொடர்பாக கீரைத்துறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Source: Read Full Article