உண்மையான தீபாவளி இதுதான்! - ஆதரவற்றோரின் முகத்தில் பூத்த புன்னகை.. மகிழ்ச்சியில் குழந்தைகள்

உண்மையான தீபாவளி இதுதான்! - ஆதரவற்றோரின் முகத்தில் பூத்த புன்னகை.. மகிழ்ச்சியில் குழந்தைகள்
News Image

கடலூரில் ஆதரவற்ற உறவுகளோடு சமூக ஆர்வலர்கள் தீபாவளியை கொண்டாடினார்கள். எட்டு ஆண்டுகளாக  மனிதநேய விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

தீபாவளி பண்டிகையை என்றால் கொண்டாட்டங்கள் தான். புத்தாடை, இனிப்பு, பலகாரம் என எல்லோரும் மகிழ்ச்சியோடு கொண்டாட கூடிய இந்த தீபாவளி பண்டிகை எல்லோருக்கும் மகிழ்ச்சியை தருவதில்லை.  அவ்வாறு தீபாவளி கொண்டாட்டங்களை கொண்டாட முடியாமல் புத்தாடை வாங்க முடியாமல் உள்ள ஆதரவற்ற ஏழை எளிய குடும்பங்களை தேர்வு செய்து கடந்த எட்டு ஆண்டுகளாக மனிதநேயத்தோடு கடலூரில் உள்ள சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து மனிதநேய தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில், இந்த ஆண்டு கடலூர் கம்மியம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் மினி மஹாலில் மனிதநேய தீபாவளி திருவிழா கொண்டாடப்பட்டது. இதில் சிங்கப்பெண்கள் சிறப்பு படை ஆய்வாளர் லிடியா செல்வி மற்றும் சிங்கப்பெண்கள் காவல்துறையினர், கடலூர் சிறப்பு உதவி ஆய்வாளர் திருமாவளவன், கடலூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் சரத் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். சமூக ஆர்வலர்கள் இணைந்து ஆதரவற்ற ஏழை குழந்தைகளுடன் தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும், ஆதரவற்றோர் புத்தாடை அணிந்து மத்தாப்பு கொளுத்தி மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாடினர்கள்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks